இன்று முதல் மூன்று நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை பெய்யப்போகுது... வானிலை மையம் குட் நியூஸ்
தமிழகத்தில் வளி மண்டல சுழற்சி காரணமாக தேனி, நீலகிரி கோவையில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் கடலோரம் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்று முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. இன்றைய தினம் சென்னை வானிலை மையம் மழை குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி காரைக்காலில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும். தேனி, நீலகிரி, கோவையில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

நாளைய தினம் நவம்பர்4ஆம் தேதி மதுரை, சிவகங்கை, தேனி, கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அடுத்த 72 மணிநேரத்தில் அதாவது நவம்பர் 5ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள் தென் மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, கடலூர், மயிலாடுதுறை, கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தேனி மாவட்டத்தில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது. நீலகிரியில் 8 செமீ மழை பதிவாகியுள்ளது.
-
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications