கொட்டும் மழையில் கோட் போட்டுக் கொண்டு களமிறங்கிய மேயர் பிரியா.. அடைமழையிலும் விடாமல் பணி
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து பொதுமக்களிடம் வரும் அழைப்புகளை நேரடியாக மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் கண்காணித்து வருகிறார். இது ஒருபுறம் எனில் மழைநீர் தங்கு தடையின்றி செல்வதை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பல்வேறு பகுதிகளில் நேரடியாக சென்று கண்காணித்து வருகிறார்.
சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.. இன்று காலை 9 மணிக்கு ஆரம்பித்த மழை மாலை 4 மணி வரையிலும் விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. சென்னையில் மழை பெய்தால் சாலைகளில் தண்ணீர் தேங்குவது இயல்பு.. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கும். தண்ணீர் வெளியேற வழியில்லாத பகுதிகளிலும் தண்ணீர் தேங்கும். அதுபோல் தண்ணீர் தேங்கும் இடங்களை ஏற்கனவே அடையாளம் கண்ட சென்னை மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்களுடன் சென்று பல்வேறு முன்னேற்பாடுகளை செய்தனர்..

சாலைகளில் எங்கெல்லாம் பள்ளம் அதிகமாக ஏற்படுகிறதோ, வார்டு வாரியாக கண்காணித்து, சாலைகளில் சல்லியை கொட்டி சமப்படுத்தும் பணிகள் நடந்தது. சென்னையில் மோசமான பள்ளம் ஏற்பட்ட பல்வேறு பகுதிகளில் இந்த பணிகள் நடந்தது.
முன்னதாக இன்று காலை மழை பெய்ய தொடங்கிய உடனேயே சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சியின் உயர் அதிகாரிகள், மண்டல அதிகாரிகள், பொறியாளர்கள் ஆகியோர் தலைமையில் இன்று காலை ஆலோசனை கூட்டம் நடந்தது. வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் களப்பணி நடவடிக்கைகள், மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட சுரங்கப்பாதைகளை கேமராக்கள் மூலம் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து களத்திற்கு சென்று ஒவ்வொரு பகுதியாக முன்னேற்பாடு பணிகளை கண்காணித்தனர். இராயப்பேட்டை ஜி.பி.சாலையில் உள்ள வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் மழைநீர் தங்குதடையின்றி செல்லும் பணியினை மேயர் பிரியா , மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதேபோல திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட டெமல்லஸ் சாலையில் உள்ள நீரேற்று நிலையத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வெளியேற்றும் பணிகள் விரைவாக செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, அங்காளம்மன் கோயில் தெருவில் உள்ள மழைநீர் வடிகாலில் மழைநீர் சீராக வெளியேற்றும் பணியையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதேபோல் திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட ஸ்டீபன்சன் சாலை செங்கை சிவம் மேம்பாலத்தின் அருகில் நீர் வெளியேற்றும் நிலையத்தின் மூலம் ஓட்டேரி நல்லா கால்வாயில் மழைநீர் வெளியேற்றும் பணி நடந்தது. வடசென்னையில் பொதுவாக தண்ணீர் தேங்கும் திரு.வி.க சாலையில் (ஜி.பி. ரோடு) சென்ற ஆண்டு வடகிழக்கு பருவ மழையின்போது 2 அடி தண்ணீர் தேங்கிய நிலையில் நேற்று முதல் பெய்து வரும் கனமழையில் தண்ணீர் தேங்காத நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல் சென்ற ஆண்டு மழையின் போது தண்ணீர் தேங்கிய பாரிமுனை, பிராட்வே ரோடு - பிரகாசம் சாலையில் புதிய மழைநீர் வடிகால் கட்டியதால் இந்த ஆண்டு தண்ணீர் தேங்காத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் எங்கெல்லாம் தண்ணீர் தேங்கும், எங்கெல்லாம் பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதை கண்டறிந்து அந்த இடங்களில் தனிகவனம் செலுத்தியதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. இதனிடையே திநகர் உள்பட சில இடங்களில் மரம் முறிந்து விழுந்தது. அதனை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அம்பத்தூர், சைதாப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை என ஒவ்வொரு இடத்திலும் தீவிரமாக கண்காணித்து மழை நீர் தேங்காத அளவிற்கு நடவடிக்கை எடுத்தனர்.

சென்னையில் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால், மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தெரிவிக்க சென்னை மாநகராட்சி சார்பில் தொலைப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.. அந்த மையத்திற்கு வரும் அழைப்புகளை மேயர் பிரியா நேரில் ஆய்வு செய்தார். பொதுமக்களின் தொலைப்பேசி அழைப்புகளுக்கு மேயர் பதில் அளித்து பேசினார்.. ஏராளமானோர் மாநகராட்சிக்கு அழைத்து குறைகளை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். மாநகராட்சி பணியாளர்கள் விரைந்து சென்று அந்த இடங்களில் எல்லாம் தண்ணீர் செல்ல வழிகளை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆபத்தான பள்ளம் உள்ள சாலைகளில் சல்லி கற்களை கொட்டு சமப்படுத்தும் பணிகளையும் செய்து வருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications