சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரபிக் கடலில் 2 புயல்கள்.. தமிழகத்தில் கன மழை. பல மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

Google Oneindia Tamil News

Recommended Video

    Moderate rain likely in parts of south Tamil Nadu | 8 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

    சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருமவழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் அரபிக் கடலில் 2 புயல்கள் உருவாகி இருக்கின்றன.

    Heavy Rain continue In Tamil Nadu Today; Schools, Colleges Closed In 2 Districts

    ஏற்கனவே கியார் புயல் உருவாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து மஹா என்ற மற்றொரு புயலும் உருவாகி உள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து 120 கி.மீ தொலைவில் இந்த மஹா புயல் மையம் கொண்டு வடமேற்கு நோக்கி நகருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இதையடுத்து மழை தீவிரமடைந்துள்ளது. தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

    பூபேஷ் ஜி! இதோ உங்கள் செப்பல்.. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.. மறக்க முடியாத இந்திராபூபேஷ் ஜி! இதோ உங்கள் செப்பல்.. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.. மறக்க முடியாத இந்திரா

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாக்களிலும் திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் தாலுகாவிலும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.

    இதேபோல் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டிருக்கிறது.

    English summary
    Schools and colleges are closed in Two districts of Tamil Nadu today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X