தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை - ஆயுதபூஜை நாளில் கோவை, நீலகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் பல ஊர்களில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்தாலும் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்பு மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார்.

வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

 Heavy rain for 4 days in Tamil Nadu - Heavy rain in Coimbatore and Nilgiris on the day of Ayudha Puja

வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகக் கூடும் என்றும் 4 அல்லது 5 நாட்களில் வலுப்பெற்று ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், கொங்கன் மற்றும் கோவா, மத்திய மகாராஷ்டிரா, கர்நாடகாவின் உட்புற பகுதிகள், ராயல்சீமா, கேரளா, மாஹே, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில், இன்று தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், சேலம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளைய தினம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு,விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

13ஆம் தேதி நீலகிரி,கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையை மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

14ஆம் தேதி நீலகிரி, கோவை, மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஈரோடு, தேனி, திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

15ஆம் தேதியன்று நீலகிரி, கோவை, மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஈரோடு, தேனி, திண்டுக்கல், சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, மதுரை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையை மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. அதிக பட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அரியலூரில் 10 செமீ மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரி, சோழிங்கநல்லூர்,மன்னார்குடி, விரகனூர், இரனியரில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது. செங்கல்பட்டு , கன்னியாகுமரி, கிருஷ்ணகிரியில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது.

வரும் 13ஆம் தேதி அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 15ஆம் தேதி ஆந்திரா ஓடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் இன்றுமுதல் 13ஆம் தேதி வரைக்கும் அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் 14,15ஆம் தேதிகளில் தெற்கு வங்கக் கடல் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் எனவே மீனவர்கள் இந்த கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

அரபிக்கடல் பகுதிகளில் 14,15ஆம் தேதிகளில் கேரளா, கர்நாடகாவை ஒட்டிய கடலோர பகுதிகள், மாலத்தீவு, லட்சத்தீவு,பகுதிகளில் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வரும் 14,15ஆம் தேதிகளில் ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்துள்ளதாக வானிலை மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+