இரவு முழுக்க பெய்த மழை.. இன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகளில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது.
Recommended Video

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகளில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது.
வடகிழக்கு பருவமழை தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இதனால் கனமழை பெய்து வருகிறது.
சென்னைக்கு அருகே ஆந்திராவின் பக்கத்தில் இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் தற்போது மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வலுவடையும்
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை போக போக வலுவடையும். இன்று இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. அதன்பின் புயலாக மாறும். ஆனால் இந்த புயல் சென்னையை தாக்காது.

பெரும் மழை
இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தற்போது தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு முழுக்க பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நீலகிரி, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. கன்னியாகுமரியில் கடல் சீற்றத்துடன் மழையும் பெய்தது.

மிக கனமழை பெய்தது
அதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, கோவையில் மிக கனமழை பெய்தது. சென்னையில் இரவு நேரத்தில் சாரல் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. நீலகிரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் தற்போதும் மழை பெய்து வருகிறது.

இன்றும் பெய்யும்
அதேபோல் இன்றும் டெல்டா மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யும். இன்னும் இரண்டு நாட்களுக்கு இந்த கனமழை நீடிக்கும். சென்னையில் இன்றிலிருந்து மழை தீவிரம் அடையும் என்று கூறப்பட்டுள்ளது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications