தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மிக கனமழை..3 நாட்களுக்கு நீடிக்கும் - வானிலை சொன்ன நல்ல செய்தி

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. காஞ்சிபுரம், கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் பெரம்பலூர் கள்ளக்குறிச்சி சேலம் திருவண்ணாமலை கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Heavy rain in 6 districts due to atmospheric overlay circulation - good news for weather

சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் காலை முதலே மழை பெய்து வருகிறது. திண்டுக்கல் தேனி தென்காசி மதுரை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்த நிலையில் டெல்டா மற்றும் சிவகங்கை, கன்னியாகுமரி, கோயமுத்தூர், நீலகிரி ,ஈரோடு, விருதுநகர், திருச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது

கடந்த 24 மணி நேரத்தில் சத்தியமங்கலம் (ஈரோடு) 8, சித்தார் (கன்னியாகுமரி) 7, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), எமெரால்ட் (நீலகிரி) தலா 5, பரங்கிப்பேட்டை (கடலூர்), தீர்த்தாண்டதானாம் (ராமநாதபுரம்) தலா 4, அண்ணா பல்கலை (சென்னை), சத்தியபாமா பல்கலை (செங்கல்பட்டு), புழல் (திருவள்ளூர்), பொள்ளாச்சி (கோவை), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), திருபுவனம் (சிவகங்கை), பெரியாறு (தேனி), ஊத்துக்குளி (திருப்பூர்) தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

அயனாவரம் (சென்னை), சென்னை நுங்கம்பாக்கம், மேட்டுப்பட்டி (மதுரை), வீரகனூர் (சேலம்), ஆயிக்குடி (தென்காசி), தலா 2, சென்னை விமான நிலையம், மயிலாடுதுறை, காரியாபட்டி (விருதுநகர்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), கடம்பூர் (தூத்துக்குடி), மீமிசல் (புதுக்கோட்டை), காட்பாடி (வேலூர்), பாபநாசம் (திருநெல்வேலி), பரமத்திவேலூர் (நாமக்கல்), காஞ்சிபுரம், திருவாரூர் பாடாலூர் (பெரம்பலூர்) வேங்கூர் (கள்ளக்குறிச்சி) தலா 1 செம.மீ அளவில் மழை பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அக்டோபர் 8ஆம் தேதி வரைக்கும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் மாவட்டங்கள், டெல்டா (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை) மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அக்டோபர் 6ஆம் தேதி நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அக்டோபர் 7ஆம் தேதி வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

அக்டோபர் 8ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அக்டோபர் 9ஆம் தேதியன்று, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், வட மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசான மழையும் பெய்ய கூடும். என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    Tamilnadu-ல் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும் அவ்வப்போது கன மழையும் பெய்யக்கூடும்.

    இன்று தமிழக கடற்கரையை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அக்டோபர் 8ஆம் தேதியன்று மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+