வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்யும் - வானிலை மையம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை
சென்னை: ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரியில் இடி மின்னலுடன் கூடிய இலேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் ஜூன் மாதத்தில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை பல இடங்களில் ஓய்ந்து விட்டது என்றாலும் அவ்வப்போது சில ஊர்களில் தூரலாக பெய்து வருகிறது.

பல மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வரும் நிலையில், 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரியில் இடி மின்னலுடன் கூடிய இலேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த அதிகபட்சமாக ஏற்காட்டில் 8 செ.மீ, கே. மாத்தூரில் 6 செ.மீ, நெய்வேலி மற்றும் வேப்பூரில் தலா 5 செ.மீ மழை பதிவாகி இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
அக்டோபர் 3 ஆம் தேதி அந்தமான் கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா கடலோர பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசகூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.
-
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications