சென்னையில் காலையிலேயே பல இடங்களில் வெளுத்த கனமழை.. செம்ம என்ஜாய்!
சென்னை: சென்னையில் இன்று காலையிலேயே சூப்பர் மழை பெய்தது கொரோனாவால் ஊரடங்கி கிடக்கும் வேளையில் கருமேகங்கள் சூழ்ந்து, குளுகுளு காற்றுடன் பெய்த மழை சென்னை வாசிகளை மகிழ வைத்துள்ளது..
Recommended Video
எப்போதும் ஞாயிற்றுக்கிழமை தான் சென்னை வாசிகளுக்கு சந்தோஷமான நாள். ஏனெனில் அன்று தான் விடுமுறை. விரும்பியதை சாப்பிட்டுவிட்டு, குழந்தைகளோடு மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பார்கள். துரதிஷ்டவசமாக இப்போது ஞாயிற்றுக்கிழமைக்கே விடுமுறைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. எல்லாம் இந்த பாழாய் போன கொரோனாவால் வந்த வினை.

ஞாயிற்றுக்கிழமையான இன்று சென்னை மக்கள் முழு ஊரடங்கால் முடங்கி கிடக்கிறார்கள். இந்நிலையில் இன்று காலையில் வழக்கம் போல் உதிக்கும் சூரியன் உதிக்கவில்லை. வானத்தை கருமேகங்கள் சூழ்ந்திருந்தன. உடலில் தண்ணீரை ஊற்றிவிட்டு மின்விசிறியை போட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது கிளைமேட்..
இந்த ஊதக்காற்று மழையாக மாறி வெளுக்கத் தொடங்கியது. சென்னை ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், கிண்டி, வேளச்சேரி, தரமணி, புழுதிவாக்கம், பரங்கிமலை, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

இதேபோல் முகப்பேர், அண்ணா நகர், வடபழனி, அயனாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், சாலிகிராமம், வடபழனி, மைலாப்பூர் என சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்தது. வழக்கமாக காலையில் மழை பெய்தால் சென்னை வாசிகளுக்கு ஸ்பெசல் தான். ஆனால் சில நேரம் கனமழையாக வெளுத்துவிட்டால் நிச்சயம் அது நரக வேதனையாகிவிடும். வேலைக்கு செல்வதற்கு கூட சிரமத்தை உண்டாக்கிவிடும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்தால், அதுவும் காலையிலேயே சூப்பர்மழை பெய்தால் நிச்சயம் ரொம்பவே ஸ்பெசல் தான். வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் மக்களுக்கு இந்த ஜில் மழை ஆனந்த கொண்டாட்டத்தை உருவாக்கி இருக்கும்.
பல வாரங்களாக ஞாயிறுகளில் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் சென்னை மக்களுக்கும் இந்த மழை புது உற்சாகத்ததை தந்திருக்கும். மண்ணை மட்டுமல்ல மனிதர்களையும் இந்த மழை ஒவ்வொரு முறையும் குளிர வைக்கிறது. அந்த வகையில் இந்த மழை சென்னைவாசிகளை குளிரவைத்துள்ளது.
-
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications