ஒரு நாள் மழையில் மிதக்கும் சென்னை.. எங்கும் வெள்ளக்காடாக சாலைகள்
Recommended Video
சென்னை: ஒரு நாள் இரவு மழையில் மொத்த சென்னையும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. சென்னை சாலைகள் எங்கும் நீக்கமற வெள்ளக்காடாக மாறிக்கிடக்கின்றன.
சென்னையில் நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை விடிய விடிய கனமழை பெய்தது. குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதியான தாம்பரம் மற்றும் அதனைசுற்றியுள்ள பகுதிகளில் மிகப்பெரிய அளவில் கனமழை பெய்துள்ளது.
இந்த மழையால் சென்னை நகரின் சாலைகள் முற்றிலும் வெள்ளத்தில் மிதக்கின்றன. அண்ணா சாலை, வேளச்சேரி சாலை, தாம்பரம் முடிச்சூர் சாலை என பல சாலைகள் வெள்ளத்தில் மிதக்கிறது,
|
செம்பாக்கத்தில்
காஞ்சிபுரம் மாவட்டம் திருவனஞ்சேரி செம்பாக்கத்தில் பாரதிதாசன் தெருவில் சுமார் 400 மக்கள் வள்ளத்தில் சிக்கி தவித்து வருவதாக டுவிட்டரில் ஒருவர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களை பார்க்கும் போது வீட்டின் முகப்பு சாலைகள் தண்ணீரில் மிதக்கின்றன. வீட்டுக்குள்ளும் தண்ணீர் வந்துள்ளன.
|
மருத்துவமனையில்
தாம்பரம் சானிட்டோரியம் நெஞ்சக அரசு மருத்துவமனை தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது. தண்ணீர் வழிந்தோடுவதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
|
திருவனஞ்சேரி
திருவனஞ்சேரி அகரம் மெயின்ரோடு சாலை வெள்ளத்தால் மூழ்கி கிடக்கிறது. இதேபோல் நன்மங்கலத்தில் வீடுகள் நிறைந்த பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
|
சாலையில் தண்ணீர்
தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் பீர்க்கங்கரணையில் வீடுகள் நிறைந்த பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications