இரவு முழுக்க பிச்சு எடுத்த மழை.. சென்னையில் இன்றும் பெய்யுமா? ஜில்லென வந்த வானிலை ரிப்போர்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யும், சென்னையில் மழை பெய்யுமா என்பது குறித்த விரிவான அறிக்கையை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முழுக்க சென்னையில் மழை பிச்சு எடுத்தது. இரவு 9 மணிக்கு சென்னையில் தொடங்கிய மழை அதிகாலை வர விடாமல் பெய்தது.

சென்னை மழை
சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யும், சென்னையில் மழை பெய்யுமா என்பது குறித்த விரிவான அறிக்கையை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
Recommended Video

வானிலை அறிக்கையின்படி
21.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
22.06.2022, 23.06.2022: வடதமிழகம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னை நிலைமை என்ன?
சென்னையை பொறுத்தவரை: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
21.06.2022, 22.06.2022, 23.06.2022: கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மழை அளவு என்ன?
நேற்று பிற்பகல் வரை பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்) பின்வருமாறு
திருப்பூர் PWD (திருப்பூர்) 8, கடம்பூர் (தூத்துக்குடி) 7, அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), சின்கோனா (கோயம்புத்தூர்) தலா 6, ஏத்தாப்பூர் (சேலம்), ஏற்காடு (சேலம்), திருச்சி டவுன் (திருச்சி), திருப்பூர் தெற்கு (திருப்பூர்) தலா 5, கிருஷ்ணராயபுரம் (கரூர்), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), ஓசூர் (கிருஷ்ணகிரி) தலா 4, எடப்பாடி (சேலம்), நன்னிலம் (திருவாரூர்), கும்பகோணம் (தஞ்சாவூர்), முசிறி (திருச்சி), உதகமண்டலம் (நீலகிரி), கிளென்மார்கன் (நீலகிரி), துறையூர் (திருச்சி), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), திருச்சி சந்திப்பு (திருச்சி) தலா 3, தென்பரநாடு (திருச்சி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), மாயனூர் (கரூர்), குளித்தலை (கரூர்), பாப்பிரெட்டிப்பட்டி (தருமபுரி), கோவில்பட்டி (தூத்துக்குடி), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), அறந்தாங்கி (புதுக்கோட்டை), மோகனூர் (நாமக்கல்), எட்டயபுரம் (தூத்துக்குடி), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) தலா 2, பரமக்குடி (ராமநாதபுரம்), சோலையாறு (கோயம்புத்தூர்), சின்னக்கல்லாறு (கோயம்புத்தூர்), தேவாலா (நீலகிரி), மணப்பாறை (திருச்சி), தாராபுரம் (திருப்பூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), ஆத்தூர் (சேலம்), தம்மம்பட்டி (சேலம்), தாத்தையங்கார்பேட்டை (திருச்சி), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்), மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு), வாத்தலை அணைக்கட்டு (திருச்சி), காட்பாடி (வேலூர்), கூடலூர் பஜார் (நீலகிரி) , சிறுகமணி KVK (திருச்சி), சிவகிரி (தென்காசி) தலா 1.












Click it and Unblock the Notifications