சென்னையை புரட்டி எடுத்த மழை.. பல மாவட்டங்களில் பரவலாக மழை.. இன்று எங்கெல்லாம் பெய்யும்?
சென்னை: தமிழ்நாடு முழுக்க பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. முக்கியமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் மழை பெய்ய தொடங்கி உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது.
முக்கியமாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
அடுத்த 3 மணி நேரங்களில்.. சென்னை உட்பட 16 மாவட்டங்களில் மழை வெளுக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை

மழை
நேற்று இரவும், இன்று அதிகாலையும் கூட சென்னையில் விட்டு விட்டு பல இடங்களில் மழை பெய்தது. சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது. எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் மழை பெய்தது. மழை காரணமாக சில இடங்களில்.

நேற்று மழை
நேற்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. பெரும்பாலான உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது.

இன்று மழை
சென்னையில் பெய்த மழை காரணமாக 13 விமானங்கள் தாமதாக இயக்கப்பட்டது. இன்றும் சென்னையில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 50 கிமீ வேகத்தில் கடலில் காற்று வீசும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மொத்தம் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

10 மாவட்டங்கள்
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். இது போக புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகள் காற்று வேகம் அதிகரித்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் காற்று வேகம் அதிகம் ஆகி உள்ளது. இங்கு சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றால் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.