சென்னை, புறநகர்களில் கன மழை.. கடலோர மாவட்டங்கள் முழுவதும் மழை!
Recommended Video

சென்னை: சென்னை நகரிலும், புறநகர்களிலும் கடந்த ஒரு மணி நேரமாக மழை பெய்து வருகிறது. காற்றுடன் கூடிய மிதமான முதல் கன மழையாக இது இருப்பதால் சென்னை நகரமே இருண்டு போய்க் காணப்படுகிறது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக வட தமிழகத்திலும், கடலோர மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும் என்று வானிலை முன்னறிவிப்புகள் கூறியுள்ளன.

இந்த நிலையில் இன்று பிற்பகலுக்கு மேல் சென்னையில் கன மழை பெய்யத் தொடங்கியது. காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. நகரிலும், புறநகர்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மழை காரணமாக ஒட்டுமொத்த சென்னையும் ஸ்தம்பித்துள்ளது. இதே மழை இன்னும் சில மணி நேரம் நீடித்தால் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை உருவாகும்.
பள்ளி, கல்லூரிகள் விடும் நேரத்தில் மழை பெய்து வருவதால் மாணவர்கள் வீடு திரும்புவதில் சிரமம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை மட்டுமல்லாமல் கடலோர தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக புயலால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து அந்த பகுதி மக்களை கலங்கடித்து வருகிறது.
-
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு












Click it and Unblock the Notifications