சென்னையில் மீண்டும் கனமழை.. தென்சென்னையின் புறநகர் பகுதிகளில் வெளுத்தெடுக்கும் மழை
Recommended Video
சென்னை: தென்சென்னையின் புறநகர் பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றால் கனமழை பெய்து வருகிறது. இது வடகிழக்கு பருவமழை சூடுபிடித்துள்ளதை காட்டுவதாக வானிலை ஆய்வு மையங்கள் கூறின.
இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, நெல்லை, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த நவம்பர் 30, டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டது.

படிப்படியாக குறையும்
அதன்படி தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் டிசம்பர் 1-ஆம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்டை இந்திய வானிலை மையம் விடுத்தது. மேலும் டிசம்பர் 3-ஆம் தேதி முதல் படிப்படியாக மழை குறையும் என கூறியிருந்தது.

விடுமுறை
நேற்று இரவு முதல் அரியலூர், ராமநாதபுரம், பெரம்பலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருவாரூர், கடலூர், சிதம்பரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் சென்னை
சென்னையில் நேற்று முதல் மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் இன்று தென்சென்னையின் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தாம்பரம், வண்டலூர், பல்லாவரம், குரோம்பேட்டை, முடிச்சூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.

இயல்பு வாழ்க்கை
ஏற்கெனவே தாம்பரம் தண்ணீரில் மிதக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அது போல் காஞ்சிபுரம், வந்தவாசி பகுதிகளில் உள்ள ஏரிகள் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications