மக்களே அலர்ட்! குடையை ரெடியா வச்சிக்கோங்க.. 15 மாவட்டம்: 'செம' மழைக்கு வாய்ப்பு..சென்னை வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களகவே விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும் இரவில் திடீரென மழை பெய்து வருகிறது. இதேபோல தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம், தர்மபுரி, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவடங்களிலும் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேடுக்கு சுழற்சிகள் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-
கனமழைக்கு வாய்ப்பு: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, சேலம், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், தர்மபுரி. திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் என 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கள்ளக்குறிச்சி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. வரும் 3 மற்றும் 4 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் எப்படி?: சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 01.09.2023 முதல் 04.09.2023 வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 02.09.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
03.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
04.09.2023 மற்றும் 05.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.
மழை அளவு: கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்) கொடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி PTO, தம்மம்பட்டி (சேலம்), கொடுமுடி (ஈரோடு) சேலம் தலா 9 செ.மீ, குடிமியான்மலை (புதுக்கோட்டை), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி) தலா 7, மருங்காபுரி (திருச்சி), தென்பரநாடு (திருச்சி), திண்டிவனம் (விழுப்புரம்), தர்மபுரி, வாத்தளை அணைக்கட்டு (திருச்சி), அடையாமடை (கன்னியாகுமரி), பஞ்சப்பட்டி (கரூர்) தலா 6 செ.மீ.
கீழ் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), குமாரபாளையம் (நாமக்கல்), ஆனைமடுவு அணை (சேலம்), நம்பியூர் (ஈரோடு), ராசிபுரம் (நாமக்கல்), பொன்னமராவதி (புதுக்கோட்டை), பாப்பாரப்பட்டி KVK AWS, மணப்பாறை (திருச்சி), கீரனூர் (புதுக்கோட்டை), சங்கரிதுர்கம் (சேலம்), துறையூர் (திருச்சி), ஊத்து (திருநெல்வேலி) தலா 5 செ.மீ.
மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), புடலூர் (தஞ்சாவூர்), திருமங்கலம் (மதுரை), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி), KRP அணை (கிருஷ்ணகிரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), காக்காச்சி (திருநெல்வேலி), திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), கடம்பூர் (தூத்துக்குடி), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), திருச்சி விமான நிலையம், புதுச்சேரி, ஹரூர் (தருமபுரி), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), ஆலங்காயம் (திருப்பத்தூர்), வேடசந்தூர் (திண்டுக்கல்) தலா 4 செ.மீ.
புகையிலை நிலையம் (திண்டுக்கல்), கோவில்பட்டி (திருச்சி), மைலம்பட்டி (கரூர்), நாமக்கல் கலெக்டர் அலுவலகம், காரையூர் (புதுக்கோட்டை), கிருஷ்ணகிரி, பண்ருட்டி (கடலூர்), ஈரோடு, RSCL-2 கேதார் (விழுப்புரம்), பவானி (ஈரோடு), மன்னார்குடி (திருவாரூர்), மதுராந்தகம் (செங்கல்பட்டு), மூலனூர் (திருப்பூர்), குழித்துறை (கன்னியாகுமரி), அவலாஞ்சி (நீலகிரி), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), விருதுநகர், சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), எறையூர் (பெரம்பலூர்), பெருந்துறை (ஈரோடு), குந்தா பாலம் (நீலகிரி) தலா 3 செ.மீ. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications