அடுத்த 2 மணி நேரத்தில் இந்த 7 மாவட்டங்களில் மழை பெய்யும்...வானிலை மையம்

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் கூறியிருந்தது. இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் ராமநாதபுரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்றைய தினம் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. நீலகிரி, கோவை, தர்மபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் புவியரசன் தெரிவித்திருந்தார். பல மாவட்டங்களில் கனமழை பெய்தது.

Heavy rain receives 7 districts in the next 2 hours Chennai met office

சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் தெற்கு கடலோர ஆந்திர மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியிருந்தது.

நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர்,ராணிப்பேட்டை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.

ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+