சென்னையில் அடுத்த 2 மணி நேரம் முக்கியம்.. நாள் முழுக்க செம மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்!
சென்னையில் இன்று நாள் முழுக்க கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.
Recommended Video
சென்னை: சென்னையில் இன்று நாள் முழுக்க கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த கனமழை காரணமாக தமிழகத்தில் சென்னை, நாகை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கல்லூரிகளுக்கு , நிர்வாகமே முடிவு செய்து கொள்ளலாம் என்று ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை நிலை
இந்த நிலையில் சென்னையில் தொடர்ந்து மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் நேற்று இரவு மழை தொடங்கியது. ஆனால் இன்னும் அங்கு மழை விடவில்லை. பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

எங்கு எல்லாம்
சென்னையில் தற்போது கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், சோழவரம், தாம்பரம், குரோம்பேட்டை, வேளச்சேரி, எழும்பூர், அண்ணா சாலை, வடபழனி, சைதாப்பேட்டை, தி நகர், கோயம்பேடு, அடையாறு, அண்ணா நகர் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு 10 மணிக்கு அங்கு மழை தொடங்கியது.

இன்று எப்படி
அதேபோல் சென்னையில் இன்று நாள் முழுக்க கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. அதிலும் அடுத்த இரண்டு மணி நேரம் முக்கியம். அடுத்த இரண்டு மணி நேரம் தீவிர கனமழை பெய்யும்.மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

கடல் எப்படி
இந்த மழை காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. இதனால் மக்கள் யாரும் பீச் பக்கம் செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் மீனவர்களும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்!












Click it and Unblock the Notifications