லேசுப்பட்ட மழை இல்லை.. கன மழை.. இன்றும் நாளையும் 11 மாவட்டங்களில் வெளுக்கும்- சென்னை வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில், இன்றும், நாளையும் பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம், ஜில் ஜில், கூல் கூல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கடுமையான வெப்பநிலை உயர்ந்து காணப்படக் கூடிய இந்த சூழ்நிலையில் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
எந்தெந்த மாவட்டங்களில் இன்று மற்றும் எந்தெந்த மாவட்டங்களில் நாளை கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று மதியம் வெளியிட்டது.

சென்னை வானிலை ஆய்வு மையம்
வங்கக் கடலில் அல்லது அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அல்லது புயல் சின்னம் எதுவும் இல்லாத சூழ்நிலையில் இந்த மழை பெய்வதற்கு வெப்பசலனம் காரணம் என்று கூறப்படுகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்படி எந்தெந்த மாவட்டங்களில் எப்போது மழை பெய்யும் என்ற விவரம் இதோ.

இன்று எந்த மாவட்டங்களில் மழை
வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு , விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

நாளை எந்த மாவட்டங்கள்
அதே போன்று நாளை, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர் , உதகமண்டலம் உள்பட, நீலகிரி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த மாவட்டங்களில் சில, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய பகுதிகளை ஒட்டி உள்ளன. எனவே அந்த எல்லையோரப் பகுதிகளிலும் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

கன மழை பெய்யும்
அதிலும் சாதாரண மழையல்ல. கனமழை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. எனவே மேலே குறிப்பிட்ட இந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், வெளியே செல்லவேண்டியது வந்தால், கண்டிப்பாக குடைகளை எடுத்துச் செல்வது நல்லது. கடும் வெப்பத்துக்கு இந்த கனமழை ஆறுதல் தரும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
-
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்?












Click it and Unblock the Notifications