4.5 செமீக்கு கடல் அலை.. பலத்த காற்று.. தமிழகத்தில் இன்றிலிருந்து கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் இன்றில் இருந்து அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை; தமிழகத்தில் இன்றில் இருந்து அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Recommended Video
கடந்த வாரம் வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இந்த தாழ்வு நிலை தற்போது வலுவடைந்து வருகிறது.இதனால் கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் இன்னொரு பக்கம் தற்போது வடமேற்கு வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் வானிலை மையம் கணித்தது போலவே தற்போது வடமேற்கு வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது.

தமிழகம் மழை
இதனால் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. நேற்று இரவில் இருந்தே தமிழகத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. நேற்று இரவு சென்னையிலும், டெல்டா மாவட்டங்களிலும் இரவு முழுக்க மழை பெய்தது.

இன்று எப்படி
இந்த நிலையில் இன்று கேரளா, தெற்கு கர்நாடகா, தமிழகத்தில் இருக்கும் மலையோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.தமிழகத்தில் உள்மாவட்டங்களில் லேசான மழை பெய்ய கூடும். என்று வானிலை மையம் கூறியுள்ளது . அதிலும் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி எப்படி
அதே சமயம் கேரளாவை ஒட்டி இருக்கும் தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு பெய்தது போலவே இன்று மாலைக்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவாவூர், தஞ்சாவூர் , கடலூர் , புதுக்கோட்டை , பட்டுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடல் எப்படி
இன்று அதேபோல் லட்சத்தீவு பகுதியிலும், வங்கக்கடலில் மிக அதிக வேகத்தில் காற்று வீசும். 55 கிமீ வேகம் வரை காற்று செல்லும். கடலும் கொந்தளிப்பாக காணப்படும். கடல் மொத்தமாக 4.4 மீட்டர் உயரம் வரை எழும்ப கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எவ்வளவு மழை
தமிழகத்தில் நேற்று பெய்த மழை நிலவரம்;
- கோவை சின்னக்கல்லார் 13செ.மீ
- சேலையூர் 11செ.மீ
- மேல் பவானி 7செ.மீ
- நீலகிரி 34செ.மீ
- அவளாஞ்சி 11செ.மீ
- கூடலூர் பஜார் 8 செ.மீ
- மேல் கூடலூர் 6 செ.மீ
- பந்தலூர் 19செ.மீ
- ஹாரிசன் 18செ.மீ மழை பெய்துள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications