தமிழகத்தில் நவ.23 முதல் மீண்டும் கனமழை... வங்கக் கடலில் சூறாவளி காற்று

தமிழகத்தில் நாளை மறுநாள் நவம்பர் 23ஆம் தேதி முதல் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புஉள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை சற்றே ஒய்வு எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் நவம்பர் 23ஆம் தேதி முதல் பல மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் மட்டுமல்லாது தென் மாவட்டங்களிலும் கொட்டித்தீர்த்துள்ளது. ஆறுகளிலும், அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன.

கடந்த இரு தினங்களாக மழை சற்றே ஓய்வெடுத்துள்ளது. வெயில் தலைகாட்டத்தொடங்கியுள்ளது. இந்த நிலையில் நவம்பர் 23ஆம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை அறிவிப்பு

வானிலை அறிவிப்பு

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக நவம்பர் 24ஆம் தேதி முதல் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இன்றும் நாளையும்

இன்றும் நாளையும்

தமிழகத்தில் இன்றும் நாளையும் சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். ஏனைய மாவட்டங்களில் இரண்டு நாட்களில் வறண்ட வானிலையே காணப்படும்.

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை

நவம்பர் 23ஆம் தேதி நாகை, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏனைய தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

எத்தனை மாவட்டங்களில் மழை

எத்தனை மாவட்டங்களில் மழை

நவம்பர் 24ஆம் தேதி கடலூர்,மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும்.

மீனவர்களுக்கு அறிக்கை

மீனவர்களுக்கு அறிக்கை

சென்னை புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அரபிக்கடல் பகுதியில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். நவம்பர் 23ஆம் தேதி முதல் வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி வீசக்கூடும் என்றும் மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+