இன்று 15, நாளை 9 மாவட்டங்கள்.. கன மழை பெய்யப்போகும் பகுதிகள் இவைதான்! வானிலை மையம் தந்த பட்டியல்
Recommended Video
சென்னை: தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும். நாளை 9 மாவட்டங்களில் கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரு நாட்களுக்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல், மிதமான மழை பெய்யும்.

வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை காண வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 13 மாவட்டங்களில் கன மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரத்தில் 16 செ.மீ மழையும், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் 14 சென்டிமீட்டர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 11 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
வலிமையான காற்று வீசும் என்பதால், குமரி கடல் பகுதி, மாலத்தீவு மற்றும் தமிழகத்தின் தெற்கு கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று, மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications