திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நீலகிரி.. தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கன மழை
சென்னை: தமிழகத்தில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நீலகிரி, திருப்பத்தூர் உட்பட பல மாவட்டங்களில் நேற்று கன மழை பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூர், கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. லவ்டேல், தொட்டபெட்டா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்த காரணமாக சொற்ப எண்ணிக்கையில் வந்திருந்த சுற்றுலா பயணிகளும் விடுதிகளில் முடங்கும் சூழல் ஏற்பட்டது.

சேலத்தில் இடி மின்னல், சூறைக் காற்றுடன் கன மழை கொட்டித் தீர்த்தது. மேட்டூர், கொளத்தூர், மேச்சேரி, நங்கவள்ளி, ஜலகண்டபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. கனமழை காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றனர்.
அதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மலை கிராமங்களில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கு மேல் மழை பெய்தது. செய்யூர், இரும்பேடு, கண்ணமங்கலம், சந்தவாசல் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. ஈஸ்வரன் கோயில் பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சாலையில் தேங்கிய தண்ணீரில் மிதந்தன.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டி தீர்த்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பொழிந்தது. காலையில் வெயில் வாட்டிய நிலையில் திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
-
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications