முடங்கியது சென்னை.. பல கிமீ அணிவகுத்த வாகனங்கள்.. கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள்
சென்னை: தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. நாளை சனி மற்றும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர். இதனால் சென்னை கிளாம்பாக்கம், மாமண்டூர் பாலம், சிங்கம்பெருமாள் கோவில் உள்பட பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் சுமார் 2 கிலோமீட்டர் வரை அணிவகுத்து நிற்பதால் பயணிகள் பெரிதும் அவதியடைந்துள்ளனர்.
வரும் 20ம் தேதி (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று வருகின்றனர். நேற்று முதலே மக்கள் சென்னையை காலி செய்து தீபாவளி பண்டிகையை கொண்டாட பிறந்த ஊரை நோக்கி பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் இன்று மாலையில் சென்னையில் இருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் வெளியேறினர். அரசு பஸ், தனியார் பஸ், கார், டூவீலர்களில் பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் சென்னையில் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அதன்படி கிளாம்பாக்கம் - தாம்பரம் நெடுஞ்சாலையில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் இருந்து ஏராளமான மக்கள் தென்மாவட்டங்களுக்கு பயணிக்கின்றனர். அதேபோல் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கும் ஏராளமானவர்கள் வருகை தருகின்றனர். இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் மாமண்டூர் மேம்பாலத்தில் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மாமண்டூர் பாலாற்று பாலம் மிகவும் குறுகலாக உள்ளது. ஒரே நேரத்தில் அதிகமான வாகனங்கள் அங்கு செல்வதால் நெரிசல் ஏற்பட்டுள்து. அதேபோல் சிங்கபெருமாள் கோவில், பரனூர் சுங்கச்சாவடி, மாமண்டூர் பாலம், புக்கத்துறை, ஆத்தூர் பாலம், செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலை உள்பட 10க்கும் அதிகமான இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications