Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொங்கலுக்கு ஜாலியாக ஹெலிகாப்டர் ரைடு போலாமா? ஒருவருக்கு டிக்கெட் எவ்வளவு? முழு விவரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிழக்கு கடற்கரைச் சாலையில் (ECR) ஹெலிகாப்டர் சுற்றுலா நேற்றைய தினம் (ஜன.12) தொடங்கி 18ஆம் தேதி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நாளை போகி பொங்கல், ஜன 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை, 16 ஆம் தேதி மாட்டுப் பொங்கல், 17 ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

pongal 2026 helicopter 2026

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட பலர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். இதற்காக தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும் ஆம்னி பேருந்துகலில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து போக்குவரத்துக் கழகம் அனுப்பிய செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் வார விடுமுறையை முன்னிட்டு (12.01.2026 முதல் 18.01.2026 வரை) பொதுமக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால் அதனைத் தடுக்க வேண்டும்.

இதனையடுத்து, தமிழ்நாடு முழுவதும் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்டு சிறப்புக்குழு அமைக்கப்பட்டு அதிகப்படியான கட்டணம் வசூல் செய்யும் மற்றும் அனுமதிக்குப்புறம்பாக இயங்கும் ஆம்னி பேருந்துகளை தீவிரமாக சோதனை செய்து அபராதம் விதித்தும், வாகனங்களை சிறைபிடித்தும் வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் அதிக அளவில் தங்களது சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதால் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வருவதை தொடர்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் கீழ்காணும் எண்கள் மூலம் தொலைப்பேசி வாயிலாகவோ, வாட்ஸ் ஆப் மூலம் குறுஞ்செய்தி அல்லது குரல் பதிவாகவோ புகார் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம், சென்னை 1800 425 6151

இணைப்போக்குவரத்து ஆணையரகம், சென்னை (வடக்கு) 99442 53404

இணைப்போக்குவரத்து ஆணையரகம், சென்னை (தெற்கு) 97905 50052

இணைப்போக்குவரத்து ஆணையரகம், மதுரை 90953 66394

இணைப்போக்குவரத்து ஆணையரகம், கோயம்புத்தூர் 91235 93971

துணைப்போக்குவரத்து ஆணையரகம், விழுப்புரம் 96773 98825

துணைப்போக்குவரத்து ஆணையரகம், வேலூர் 98400 23011

துணைப்போக்குவரத்து ஆணையரகம், சேலம் 78456 36423

துணைப்போக்குவரத்து ஆணையரகம், ஈரோடு 80569 40040

துணைப்போக்குவரத்து ஆணையரகம், திருச்சிராப்பள்ளி 90660 32343

துணைப்போக்குவரத்து ஆணையரகம், விருதுநகர் 90257 23800

துணைப்போக்குவரத்து ஆணையரகம், திருநெல்வேலி 96981 18011

துணைப்போக்குவரத்து ஆணையரகம், தஞ்சாவூர் 95850 20865

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கலுக்காக சென்னையில் சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்லும் நிலையில் பலர் சுற்றுலாவுக்கும் செல்கிறார்கள். நவக்கிரக கோயில்கள், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு (குளிர்தான் இருந்தாலும் செல்கிறார்கள்), திருப்பதி, திருநள்ளாறு உள்ளிட்ட இடங்களுக்குச் செல்கிறார்கள்.

அது போல் காணும் பொங்கல் அன்று மக்கள் கூடுவர் என்பதால் மெரினா கடற்கரையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அது போல் குமரியில் படகு போக்குவரத்து நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஹெலிகாப்டர் ரைடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை தமிழக சுற்றுலாத் துறையும் தனியார் நிறுவனமும் இணைந்து நடத்துகிறது.

சென்னை ஈசிஆரில் இருந்து கோவளம் வரை இந்த ஹெலிகாப்டர் ரைடு இயக்கப்படும். கடற்கரை அழகை ரசித்தவாறு செல்லலாம். இந்த ஹெலிகாப்டர் ரைடு நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதை ஜனவரி 18ஆம் தேதி மாலை 5 மணி வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அது போல் இந்த ஹெலிகாப்டர் ரைடில் பயணிக்க எண் 45, ஈசிஆர் நெடுஞ்சாலை, கோவளம் சுங்கச்சாவடி அருகே வர வேண்டும். ஹெலிகாப்டர் பயணத்திற்கான நேரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இவை வானிலை நிலவரத்தை பொருத்து மாறுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் காலை 10 முதல் 11.30 மணி, 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை, 2 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை , 3.30 மணி முதல் மாலை 5 மணி வரை என 4 ஸ்லாட்கள் உள்ளன.

இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்ய 2 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவருக்கு ரூ 5,999 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 1 முதல் 2 வயது குழந்தைகளுக்கு இலவச பயணம். ஆனால் தனி இருக்கை கிடையாது.

இந்த ஹெலிகாப்டர் பயணத்திற்கு வாகனங்களில் வருவோருக்கு பார்க்கிங் இருக்கிறது. எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அனைத்து வயதினருக்கும் ஏற்றது.

ஹெலிகாப்டர் ரைடில் பயணிக்க ஆதார் அல்லது வேறு ஏதேனும் அடையாள அட்டை அவசியம். டிக்கெட் வாங்கிவிட்டால் அந்த கட்டணத்தை திருப்பி கொடுக்க இயலாது. வானிலை நிலவரம் அல்லது தொழில்நுட்ப கோளாறுகளால் பிரச்சினை ஏற்பட்டால் மட்டுமே கட்டணம் திருப்பி கொடுக்கப்படும் அல்லது வேறு ஒரு ஸ்லாட்டில் அனுமதிக்கப்படுவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+