Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிருப்தியான திமுக.. மயிலாடுதுறை வேட்பாளராக சுதா தேர்வு.. இரவில் வெளியான பெயர்! இவ்வளவு இழுபறி ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு நாளை (மார்ச் 27) கடைசி நாள் ஆகும். ஆனால் மயிலாடுதுறை தொகுதிக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அறிவிக்க முடியாமல், கட்சி மேலிடம் தலையை பிய்த்துக் கொண்டிருந்த நிலையில் திமுகவும் அதிருப்தியானது. இந்நிலையில் தான் இன்று இரவு வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் மற்ற கட்சிகள் எல்லாம் தேர்தல் பிரச்சாரத்திற்கு முதல் நாளிலேயே வேட்பாளர்களை அறிவித்தால், காங்கிரஸ் கட்சி மட்டும் கடைசி நேரத்தில் தான் வேட்பாளர்களை அறிவிக்கும். குறிப்பாக சில தொகுதிகளுக்கு கடைசி நாளில் கூட வேட்பாளர்களை அறிவிக்கும். இது ஒவ்வொரு தேர்தலில் நடைபெறும் பராம்பரியமாக உள்ளது. காங்கிரஸ் கட்சியில் உள்ள கோஷ்டி மோதல் உலகத்திற்கு தெரியும். இதன் காரணமாக தலைவர்களின் அழுத்தம் காரணமாக வேட்பாளர்களை இந்த முறையும் தாமதமாகவே காங்கிரஸ் அறிவித்தது. ஆனால் மயிலாடுதுறை தொகுதி வேட்பாளரை முடிவு செய்ய முடியாத நிலையில் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் இருக்கிறார்களாம்

Hello Congress where is the Mayiladuthurai candidate Why so much drag DMK is unhappy

வேட்பு மனுதாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்கிற சூழலில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. பெயர் அறிவித்த பிறகுதான் மனுதாக்கலுக்கான ஏற்பாடுகளை வேட்பாளர் செய்ய வேண்டிய நிலை உள்ளதால், அதற்கான கால அவகாசம் மிகவும் குறைவாகவே உள்ளது.இன்று இரவுக்குள் வேட்பாளர்களை அறிவித்தே ஆக வேண்டிய நிலையில் காங்கிரஸ் மேலிடம் இருக்கிறது.

திமுகவில் ஸ்டாலின் யார் கையை காட்டுகிறாரோ அவர் தான் வேட்பாளர்.. அவர் பேச்சை மீறி யாரும் பிரச்சனை செய்ய முடியாது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தான் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வார். ஆனால் காங்கிரஸ் கட்சியில் அப்படி இல்லை. மேலிட தலைவர்களே முடிவு செய்வார்கள். இதனால் ஒவ்வொருவரும் மாநில செல்வாக்கு மற்றும் டெல்லி செல்வாக்கை வைத்து எப்படியாவது முட்டி மோதி சீட் வாங்க முயற்சிக்கிறார்கள்..

காங்கிரஸ் அறிவித்துள்ள 7 வேட்பாளர்களில், தற்போது எம்பியாக உள்ள 4 பேருக்கு அவரவர் தொகுதியிலும், ஒருவருக்கு வேறு தொகுதியிலும் என 5 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. சிவகங்கை தொகுதி வேட்பாளராக மீண்டும் கார்த்தி சிதம்பரம் 3வது முறையாக வாய்ப்பு பெற்றுள்ளார். இதேபோல் கரூர் தொகுதியில் ஜோதிமணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த முறை ஆரணி தொகுதி எம்பியாக இருந்த விஷ்ணு பிரசாத்திற்கு, இந்த முறை கடலூரில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

திருவள்ளூர் தொகுதியில், எம்பியாக இருந்த ஜெயக்குமாருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.. அவருக்கு பதில் காங்கிரஸ் வார் ரூம் குழு தலைவரான சசிகாந்த் செந்தில் (விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி) வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரியில் செல்லக்குமார் எம்பிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.. அதற்கு பதிலாக இந்த முறை முன்னாள் எம்.எல்.ஏ கோபிநாத்துக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.


கோஷ்டி பூசல் காரணமாக திருநெல்வேலிக்கான காங்கிரஸ் வேட்பாளர் கன்னியாகுமரியில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த தேர்தலில் திருச்சி தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டு விட்டதால் அந்த தொகுதி எம்.பி.யான திருநாவுக்கரசருக்கு இடமில்லை. திருநெல்வேலி தொகுதியை அவர் எதிர்பார்த்தார். அதுவும் கிடைக்கவில்லை. இதேபோல் திருநெல்வேலி தொகுதியை மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக இருக்கும் பீட்டர் அல்போன்ஸும் எதிர்பார்த்தார். அவருக்கும் கிடைக்கவில்லை.. கன்னியாகுமரியில் இருந்து வழக்கறிஞரான ராபர்ட் புரூஸ் களம் இறக்கப்பட்டுள்ளார்


இப்போது இருப்பது மயிலாடுதுறை ஒரே தொகுதிதான். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத திருநாவுக்கரசர், டாக்டர் செல்லக்குமார், மணிசங்கர அய்யர், பிரவீண் சக்கரவர்த்தி, சி.டி.மெய்யப்பன், தங்கபாலு உள்பட பலர் இந்த தொகுதிக்காக டெல்லி மேலிடத்திடம் மல்லுக்கட்டுகிறார்களாம். இதனால் தொகுதியை யாருக்கு தருவது என்று தெரியாமல் கட்சி மேலிடம் தலையை பிய்த்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியானது. வேட்பு மனுதாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்கிற சூழலில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படாதது திமுக தலைமையை அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளதாம்.

இதனிடையே நெட்டிசன்கள் சிலர் ஹலோ காங்கிரஸ்.. மயிலாடுதுறை வேட்பாளர் எங்கே? என்று கேட்க தொடங்கினர். இதற்கிடையே தான் இன்று இரவுக்குள் வேட்பாளர் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறினர். அதன்படி இரவு 8.45 மணிக்கு காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். பெரிய பெரிய தலைவர்கள் மயிலாடுதுறையை குறிவைத்த நிலையில் ஆர் சுதா என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் நாளை காலையில் வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+