பிறந்ததும் அதிர்ச்சி.. உயிருக்கு போராடும் அழகான இரட்டை குழந்தைகள்.. கொஞ்சம் உதவுங்களேன்!
உயிருக்கு போராடும் இரட்டை குழந்தைகளுக்கு நீங்கள் நினைத்தால் உதவி செய்யலாம்.
சென்னை: குறை மாதத்தில் பிறந்த உயிருக்கு போராடும் இரட்டை குழந்தைகளுக்கு நீங்கள் நினைத்தால் உதவி செய்யலாம்.
கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூரை சேர்ந்தவர்கள் பெருமாள்சாமி, செல்வராணி தம்பதியினர். செல்வராணி கர்ப்பம் ஆன பின் வீட்டிற்கு வரப்போகும் குழந்தைக்காக ஆர்வமாக காத்து இருந்தார். எப்போது குழந்தை அழுகை சத்தம் வீட்டை நிறைக்கும் என்று மிக ஆர்வமாக அவர் காத்து இருந்தார்.

ஆனால் அவருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக 6 மாதம் இருக்கும் போதே வயிறு வலி வந்திருக்கிறது., அதோடு சரியாக கருத்தரித்து 24 வாரத்தில் குழந்தை பிறந்து இருக்கிறது. இரட்டை குழந்தைகளை பெற்ற செல்வராணி அதை கொண்டாட முடியாமல் தவித்து வருகிறார்.
காரணம் இரண்டு குழந்தைகளும் எடையில் மிக மிக குறைவாக இருக்கிறார்கள். ஒரு குழந்தை 660 கிராம் மட்டுமே இருக்கிறது. இன்னொரு குழந்தை அதைவிட குறைவாக 640 கிராம் மட்டுமே இருக்கிறது. இப்படி ஒரு நிலை யாருக்காவது வருமா சொல்லுங்கள்.

தற்போது இந்த இரண்டு குழந்தைகளும் தீவிர சிகிச்சையின் பலனில் உயிர் வாழ்ந்து வருகிறார்கள். ராமகிருஷ்ணா மருத்துவமனையில் என்ஐசியூ பிரிவில் இவர்கள் இருவரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இவர்களை மூன்று மாதம் இதே பிரிவில் வைத்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, இவர்களை முழுமையாக காப்பாற்ற முடியும். இப்போது வரை ஒரு மாதம் முடிந்து இருக்கிறது. இன்னும் இரண்டு மாதம் இருக்கிறது. ஆனால் இதற்கு செலவு செய்ய பெருமாள்சாமியிடம் பணம் இல்லை.

இன்னும் சிகிச்சைக்கு 6 லட்சம் ரூபாய் தேவை. ஏற்கனவே சிகிச்சைக்கு பெருமாள்சாமி 5.5 லட்சம் வரை செலவு செய்துவிட்டார். அவர்கள் குடும்பம் மிக மிக வறுமையான குடும்பம். கடன் வாங்கித்தான் முதல் செலவை செய்து இருக்கிறார்.
நீங்கள் நினைத்தால், அந்த இரண்டு உயிர்களை காக்க முடியும். நீங்கள் இவர்களுக்கு உதவி செய்தால் இன்னும் இரண்டு மாதம் இரட்டை குழந்தைகள் சிகிச்சை பெற்று குணமடைய முடியும். அந்த இரண்டு பிஞ்சுகளின் உயிர் உங்களின் கைகளில் இருக்கிறது.

உங்களால் முடிந்த உதவிகளை உடனே இவர்களின் குடும்பத்திற்கு செய்யுங்கள்.. அந்த உதவி உங்களுக்கு ஒருநாள் கைமாறாக திரும்பி வரும்... இவர்களுக்கு உதவ விரும்பினால் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்..!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications