அன்னபூரணி உருவாவதற்கு யார் காரணம்? "இவர்கள்தான்" "அவதாரத்தின்" ரோல் மாடலோ?
சென்னை: ராதே மா, ஸ்ரீபவித்ரா, மா ஆதி சக்தி ஆகியோரிடம் இருந்து பெற்ற இன்ஸ்பிரேஷனே அன்னபூரணி தன்னை சாமியார் என அடையாளப்படுத்திக் கொள்வதற்கு காரணமா என கேள்வி எழுகிறது.
கடந்த சில நாட்களாக அன்னபூரணி அரசு அம்மா என்கிற பெண், தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என கூறிக் கொண்டு வரும் ஜனவரி 1ஆம் தேதி திவ்ய தரிசனம் என போஸ்டர் அடித்துள்ளார்.
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் அன்னபூரணி ஈடுபட்டிருந்தது வெளியானதை அடுத்து இவரது தனிமனித வாழ்க்கையும் கேள்விக்குறியாகியுள்ளது. ஓவர் நைட்டில் பெரியாளாக வேண்டும் என அன்னபூரணி செய்த முயற்சிக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் பக்கம்
அன்னபூரணியின் பேஸ்புக் பக்கத்தில் போய் பார்த்தால் அவர் கழுத்தில் எத்தனை நகைகள், முகத்தில் எத்தனை மேக்கப்கள், உதட்டில் லிப்ஸ்டிக்... இதையெல்லாம் பார்த்தால் சொல்வதெல்லாம் உண்மை அன்னபூரணியா இது என வியக்க வைக்கிறது. அவர் நடந்து வரும் போது "பக்தர்கள்" பூக்களை தூவுவதும், அவர் உட்காரும் நாற்காலி திடீரென ஆடுவதும் பக்தர்கள் அழுவதும் என பெரிய அலப்பறையை ஏற்படுத்தியுள்ளார் அன்னபூரணி.

ஆதிபராசக்தியின் அவதாரம்
எல்லாவற்றையும் செய்து விட்டு இதையெல்லாம் நான் செய்ய சொல்லவில்லை, ஆதிபராசக்தியின் அவதாரம் என நான் என்னை கூறிக் கொள்ளவே இல்லை என்கிறார். சரி இது போல் திடீர் திடீரென பெண் சாமியார்கள் உருவாக காரணம் என்ன, அவர்களுக்கு யாரெல்லாம் இன்ஸ்பிரேஷன்களாக இருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

சாமியார்
தமிழகத்தில் அண்மைக் காலமாக ஸ்ரீபவித்ரா காளிமாதா என்பவர் மாடர்ன் உடையில் தன்னை சாமியார் என கூறிக் கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர். திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் அம்பிரல்லா கட் கொண்ட சுடிதார், கழுத்து நிறைய நகை, ஃப்ரீ ஹேர் விட்ட படி வலம் வருகிறார்.

பிரளயம்
திருவண்ணாமலை மகா தீபத்தையொட்டி திருவண்ணாமலைக்கு வந்த இவர், மூன்று மாதத்திற்குள் ஒரு பிரளயம் நடக்கும் என்று பெண் சாமியார் பவித்ரா கூறியுள்ளார். மூன்று நாட்கள் தமிழகமே அமைதியாக இருக்கும் என தெரிவித்திருந்தார். நான் இந்த பூமிக்கு வந்து விட்டேன் கொரோனா அழிந்து விடும் என்று கூறினேன். அதே போல டெல்லியில் கொரோனா ஒழிந்து விட்டது. நான் காலடி வைத்த இடங்களில் எல்லாம் கொரோனா ஒழிந்து விட்டது. சிவன் என்னை காளி உருவில் அனுப்பியுள்ளார் என இவர் தெரிவித்த கருத்துகள் அதிர்வலையை ஏற்படுத்தியது.

டெல்லி காவல் நிலையம்
இவரை போன்று வடமாநிலத்தில் ஒரு பெண் சாமியார் பிரபலமடைந்துள்ளார். அவரது பெயர் ராதே மா. இவரது இயற்பெயர் சுக்வீந்தர் கவுர். இவர் பஞ்சாப்பில் பிறந்தவர். இவர் தன்னை காளியின் அவதாரமாக கூறி வருகிறார். இவருக்கு பாலிவுட் மற்றும் சின்னதிரை நடிகர், நடிகைகள் எல்லாம் பக்தர்கள் என கூறப்படுகிறது. டெல்லி காவல் நிலையத்தில் தன்னை சாமியார் என கூறிக் கொண்ட ராதே மாவுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. இவரது வருகையின் போது போலீஸார் இவரை மலர்தூவி வரவேற்றதாக கூறப்படுகிறது. போலீஸ் அதிகாரியுடன் சரி சமமாக அமர்ந்து பேசுவது போன்ற புகைப்படங்கள் வைரலாகின. இதையடுத்து அந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

திரிசூலத்துடன் வந்த ராதே மா
இவர் அவுரங்காபாத்திலிருந்து மும்பை சென்ற போது விமானத்தில் திரிசூலத்துடன் சென்றார். அப்போது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஏற்பட்டு சர்ச்சையில் சிக்கினார். மேலும் பிக்பாஸ் இந்தி 14 ஆவது சீசனில் கலந்து கொண்ட போது சக போட்டியாளரால் பாலியல் புகாருக்குள்ளாக்கப்பட்டார். இத்தனை சர்ச்சைகளுடன் வலம் வரும் ராதே மா எப்போதும் சிவப்பு நிற சேலையில் ஃபுல் மேக்கப்பில் இருப்பார்.
Recommended Video

உ.பி.யிலும் பெண் சாமியார்
அது போல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மா ஆதி சக்தி என்பவர் பிரபலம். கொரோனா ஊரடங்கின் போது ஆன்மிக சொற்பொழிவாற்றினார். கொரோனா ஊரடங்கால் இந்த கூட்டத்திற்கு அனுமதி இல்லை என போலீஸார் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் கையில் வாளுடன் போலீஸாருடன் சண்டையிட்டார். இந்த வீடியோ வைரலானது. இது போன்ற பெண் சாமியார்களின் செல்வாக்கை பார்த்து அன்னபூரணியும் உருவானாரா என்ற கேள்வி எழுகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications