மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்ன? சாதா கட்டி எப்படி இருக்கும்? Mammogram எப்படி செய்வார்கள்?
சென்னை: மார்பகத்தில் இருக்கும் சாதா கட்டிக்கும் புற்றுநோய் கட்டிக்கும் இருக்கும் வேறுபாடுகள் என்ன? மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
கேன்சர் என்பது குணப்படுத்தக் கூடிய நோயே ஆகும். இது எப்போது சாத்தியம் என்றால் கேன்சர் நோயின் முதல் இரு நிலைகளின் போது மட்டுமே். 3ஆவது , 4 ஆவது நிலைகளில் புற்றுநோய் பாதித்த நபரை காப்பாற்றுவது என்பது அத்தனை சுலபமல்ல.
வேண்டுமானால் மாத்திரை, மருந்துகளின் மூலம் அவர்களது இறப்பை மிக சிறிய காலத்திற்கு தள்ளி போடலாம். 100-க்கும் மேற்பட்ட புற்றுநோய்கள் உள்ளன. இவை எந்த உறுப்புகளில் ஏற்படுகிறதோ அதனுடன் கேன்சர் என்ற வார்த்தையும் சேர்த்து அழைக்கப்படுகிறது.

நுரையீரல்
உலகிலேயே நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் ஆகியவை மனித உயிரிழப்பை நிச்சயம் ஏற்படுத்தும் வகைகளாக கண்டறியப்படுகின்றன. நாம் பெரும்பாலும் கேள்விப்படுவது நுரையீரல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், வாய் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் உள்ளிட்டவை ஆகும்.

தடுக்கலாம்
இவற்றில் பெரும்பாலான புற்றுநோய்களை நாம் தடுக்கமுடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். அவற்றில் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணம் புகைப்பிடித்தல். எனவே புகைப்பிடிக்காமல் இருப்பது ஒரு வகையில் இந்த புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கலாம். இவற்றிற்கு பல்வேறு காரணிகள் இருந்தாலும் புகைப்பிடித்தலை தடுப்பதால் புற்றுநோய் வரும் வாய்ப்பு
குறைவாகும்.

வாய் புற்றுநோய்
அது போல் வாயில் ஏற்படும் வாய் புற்றுநோயை தடுக்க புகையிலை, பான், குட்கா, மாவா உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். அது போல் முன்கூட்டியே அறியக் கூடிய புற்றுநோய்களாக கருப்பை மற்றும் மார்பக புற்றுநோய்கள் உள்ளன. 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் நிச்சயம் மார்பகத்தை பரிசோதனை செய்து கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

கேன்சர்
இந்தியாவில் கேன்சர் பாதிக்கப்படும் விகிதம் தற்போது அதிகமாகவே உள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முழுவதும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. பெண்களுக்கு இந்த மாதத்தில் மார்பகத்தை பரிசோதனை செய்ய நிறைய மருத்துவமனைகள் சலுகை விலைகளை வழங்கி வருகின்றன.

மார்பக புற்றுநோய்
அந்த வகையில் மார்பக புற்றுநோயை கண்டறிவது குறித்து சன் நியூஸில் அப்பல்லோ மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை அன்று சில விஷயங்களை பட்டியலிட்டார். அது போல் சாதாரண கட்டிக்கும் கேன்சர் கட்டிக்கும் இருக்கும் வித்தியாசத்தையும் அவர் பிரித்து காட்டினார்.
அந்த மருத்துவர் கூறியிருந்த மார்பக புற்றுநோய்க்கான சில அறிகுறிகள் இதோ:
1. மார்பகத்தில் வலியில்லா கட்டி
2. மார்பக காம்பு ஒரு பக்கம் மட்டும் உள்வாங்குதல். சில பெண்களுக்கு சிறு வயது முதலே இரு மார்பக காம்புகளும் உள்வாங்கியே இருக்கும். அதை நினைத்து அச்சப்பட தேவையில்லை. ஆனால் திடீரென ஒரு பக்கம் மட்டும் உள்வாங்கினால் அதை கவனிக்க வேண்டியது கட்டாயம்
3. காம்பில் இருந்து தண்ணீர் போன்ற திரவமோ அல்லது ரத்தமோ வருவது
4. மார்பகத்தில் கட்டி வந்து அதன் மேல் உள்ள தோல் ஆரஞ்சு பழத்தின் மீது உள்ள புள்ளிகளை போல் புள்ளி புள்ளியாக இருக்கும்.
5. சாதாரண கட்டியை தொடும் போது சாப்ட்டாக இருக்கும். ஆனால் கேன்சர் கட்டிகள் ஹார்டாக இருக்கும்.
6. கேன்சர் இல்லாத கட்டிகள் நன்கு ஓடி நகர்ந்து செல்லும். இதை நாங்கள் மருத்துவத்தில் breast mouse என்போம். ஆனால் கேன்சர் கட்டியை அந்த அளவுக்கு நம்மால் நகர்த்த முடியாது.
7. அக்கிளில் நெரி கட்டியிருந்தால் மார்பகத்தில் உள்ள கட்டி கேன்சராக இருக்க வாய்

அலட்சியம் வேண்டாம்
எனவே இந்த அறிகுறிகள் எல்லாம் இருந்தால் உடனே போய் புற்றுநோய் துறை நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியமாகும். மார்பக புற்றுநோயை கண்டறிய முதலில் மேமோகிராம் செய்ய வேண்டும். இதில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பது தெரிந்தால் பயாப்சி செய்ய வேண்டியது அவசியம். எதுவாக இருந்தாலும் அலட்சியம் கொள்ளாமல் ஆரம்பத்திலேயே அணுகினால் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை முடிந்த அளவுக்கு தடுக்கலாம். குழந்தைகளுக்கு ஓராண்டு வரை தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு புற்றுநோய் விகிதம் பால் கொடுக்காத பெண்களை விட குறைவாகும் என மருத்துவர் கூறினார்.

மேமோகிராம் என்றால் என்ன?
மேமோகிராம் எனப்படும் மார்பகங்களை 4 வகைகளாக ஒரு கருவி மூலம் ஸ்கேன் செய்வதுதான். மார்பகத்தின் முன்பக்கமும் தோள்பட்டை பக்கமும் தனித்தனியே ஸ்கேன் செய்யும். இடது, வலது என 4 முறை அந்த இயந்திரம் மார்பகத்தை அழுத்தி ஸ்கேன் செய்யும். இது பெரும்பாலும் வலியை கொடுக்காது. இதற்கடுத்து சாதாரண அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்வார்கள். அதிலும் மார்பகத்தில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா என பார்ப்பார்கள். அதில் கொழுப்பு கட்டிகள் ஏதேனும் இருந்தால் தெரிந்துவிடும். கொழுப்பு கட்டிகளால் பிரச்சினை ஏதும் இல்லை.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications