"96" படத்தில் ஜானுவை பார்த்தீர்களே.. எஸ். ஜானகியை பார்த்தீர்களா? இங்கே பாருங்க!
சென்னை: 96 திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்று டிரென்டிங்காகி 2-ஆவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் மோஷன் பிக்சர் உள்ளது.
96 திரைப்படத்தை இயக்குநர் பிரேம்குமார் இயக்கியிருந்தார். இதில் விஜய் சேதுபதி, த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். அண்மையில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் ராமச்சந்திரன் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி பிச்சி உதறியிருப்பார். அதுபோல் எஸ். ஜானகி தேவி கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவும் பின்னி பெடலெடுத்துவிட்டார்.

அசை போடல்
இந்த படத்தில் கோவிந்த் வசந்தா இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்துமே செம. அதிலும் காதலே காதலே பாடல் அனைவரையும் ஈர்த்தது. இந்த படத்தை பார்த்துவிட்டு பெரும்பாலானோர் அவர்களது பள்ளி பருவத்தையும் கல்லூரி பருவத்தையும் அசை போட்டனர்.

காட்சிகள்
இந்த படத்தில் ஒரு காட்சி நீக்கப்பட்டதாக கூறி அதை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் பழம்பெரும் பாடகி எஸ்.ஜானகியை நடிகை த்ரிஷாவும் விஜய் சேதுபதியும் சந்திக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

நல்ல பாடல்
அந்த காட்சியில் த்ரிஷா கதாபாத்திரம் நன்கு பாடக் கூடிய அதுவும் எஸ் ஜானகியின் பாடல்களை மட்டுமே பாடக்கூடிய கதாபாத்திரமாக இருக்கும். அதை எஸ் ஜானகியிடம் விஜய் சேதுபதி கூறுவார். அதற்கு எஸ் ஜானகியோ நல்ல பாடல் என்றால் எல்லா பாடல்களையும் பாட வேண்டும்.

பாட்டு பாட சொல்லிக் கொடுக்கும் ஜானகி
அதை விட்டுவிட்டு ஒருவரது பாட்டை மட்டும்தான் பாடுவேன் என அடம்பிடிக்கக் கூடாது என்பார். சரி எனக்காக ஒரு பாட்டு பாடு நான் கேட்கிறேன் என்பார். அதற்கு த்ரிஷாவோ பூ மாலையே தோள் சேரவா என்ற பாடலை பாடுவார். அதில் சில இடங்களில் எஸ் ஜானகி பாடல் வரிகளின் ஏற்றம் இறக்கத்தை சொல்லிக் கொடுப்பார்.
காரணம் தெரியவில்லை
இந்த காட்சிதான் படத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. அது ஏன் என தெரியவில்லை. இந்த படத்திலும் எஸ் ஜானகியின் பெயரே த்ரிஷாவுக்கும் சூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications