சென்னை சூப்பர் மார்க்கெட்டில் பெண்ணின் உள்ளாடையில் இருந்து விழுந்த பொருள்.. 1 செகண்ட் ஒன்னும் புரியல
சென்னை: சென்னை அண்ணாநகரில் பிரபலமான சூப்பர் மார்க்கெட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. பொருட்களை வாங்க வந்தவர்கள், நீண்ட நேரம் எதுவுமே வாங்காமல் நின்றுள்ளனர்.. பிறகு திடீரென பொருட்கள் குறைய ஆரம்பித்தன.. இதுதான் போலீசாருக்கும் ஆச்சரியத்தை தந்துள்ளது.. என்ன நடந்தது சென்னையில்?
சென்னை, அண்ணா நகர் 6-வது அவென்யூவில் உள்ள பிரபலமான சூப்பர் மார்க்கெட்டின் மேனேஜர் அனில் என்பவர் அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றை தந்தார்..

அதில், "19.01.2026-ம் தேதி வாடிக்கையாளர்கள் போல கடைக்கு வந்த இரண்டு பெண்கள் தாங்கள் அணிந்திருந்த உள்ளாடைக்குள் மளிகை பொருட்களை மறைத்து வைத்து திருடிச் சென்றுவிட்டனர், அவர்களுக்கு உதவ இரண்டு ஆண்களும் வந்திருந்தனர். எனவே மளிகை பொருள்களைத் திருடிய 4 பேர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
சென்னை அண்ணாநகர்
மேலும் தன்னுடைய சூப்பர் மார்க்கெட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸாரிடம் ஆதாரமாக ஒப்படைத்தார்...
இதற்கு பிறகு போலீசார் இந்நடவடிக்கையில் இறங்கினார்கள்.. அப்போதுதான் அண்ணா நகர் 6-வது அவென்யூவில் உள்ள அந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு கடந்த நாள் 5 பேர் வந்தது கேமராவில் பதிவாகியிருந்தது தெரியவந்தது.. அந்த 5 பேரும் டீத்தூள், எண்ணெய் பாக்கெட்டுகள் உள்ளிட்ட மளிகைப் பொருட்களை தங்களது உடைகளுக்குள் மறைத்து வெளியேறியது பதிவாகியிருந்தது.
இந்த 5 பேரும் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் இதே முறையில் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. பெரிய பாக்கெட்டுகளை மறைக்க வசதியாக அகலமான பாவாடைகளை இந்த பெண்கள் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது..
சூப்பர் மார்க்கெட் மளிகை கடைகள்
சமீபத்தில் சென்னை வந்து வடபழனியில் ஒரு லாட்ஜில் தங்கி, வடபழனி, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் திருட்டில் இவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.. மேலும் திருடிய பொருட்களை டிராவல்ஸ் மூலம் சொந்த ஊர்களுக்கு பார்சலாக அனுப்பி வைப்பார்கள்.. அங்குள்ளவர்கள் இந்த பொருட்களை விற்று காசாக்குவார்கள்.. இந்த திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார், கத்தி, பாக்கெட் வைத்து தைக்கப்பட்ட இரண்டு பாவாடைகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இவர்கள் யாரென்று போலீஸார் விசாரித்து வந்தனர்.. அப்போதுதான் அண்ணா நகர் 3-வது அவென்யூவில் உள்ள இன்னொரு சூப்பர் மார்க்கெட்டின் மேனேஜர் கிருஷ்ணகுமார் என்பவரும் கடைக்கு வந்த 2 பெண்கள், 2 ஆண்கள் பொருட்களை திருடி சென்றுவிட்டதாக புகார் தந்தார். அப்படியானால் இந்த 2 திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே கும்பலாக இருக்குமோ என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது..
பாவாடைக்குள் பாக்கெட்டுகள்
இந்த விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே, அண்ணா நகர் பழமுதிர் நிலையத்தில் பணியாற்றும் மேனேஜர் ஆகாஷ் என்பவர், தன்னை ஒரு கும்பல் காரில் கடத்தி, 2,500 ரூபாயை வழிப்பறி செய்ததாக புகார் தந்தார்.. இறுதியில் மேற்கண்ட 3 சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே டீம்தான் என்பதை போலீசார் கண்டறிந்தனர்..
தேனிமாவட்டம் வட்சுமி (எ) தனலட்சுமி (50), நாகம்மாள் (எ) நாகு, (70) இந்த பெண்கள்தான் மேற்கண்ட திருட்டுகளில் தொடர்புடையவர்கள்.. இவர்களை கைது செய்து விசாரித்தபோது, மதுரை முருகன், (58), கரண்குமார்(25), வேலூர் முதார்சீர் (40) ஆகியோரும் இந்த வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இப்பேது மொத்தம் 5 பேர் கைதாகி உள்ளனர்.. விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது..
ஸ்பெஷல் பாவாடைகள்
இந்த 5 பேரும் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்களாம்... திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் பெண்கள், பெரிய சைஸ் பாக்கெட்டுகளுடன் கூடிய பாவாடைகளை ஸ்பெஷலாக தைத்து அணிந்து வந்துள்ளனர்..
மளிகை கடை, சூப்பர் மார்க்கெட்டுகளில் நுழைந்து, பொருட்களை வாங்குவதுபோல நோட்டமிடுவார்களாம்.. பிறகு ஊழியர்கள் இல்லாத நேரத்தில் பாவாடைக்குள் இருக்கும் பாக்கெட்டுக்குள் மளிகை பொருள்களை திருடி வைத்துக் கொண்டு ஒவ்வொருவராக வெளியேறி காரில் ஏறி கொண்டு கிளம்பி விடுவார்களாம்..
கும்பலாக வருவதால் இவர்களை தனித்தனியாக கடை ஊழியர்களால் கவனிக்க முடிவதில்லை.. சில நாட்கள் கழித்து பொருட்கள் குறைவது கணக்கில் தெரியவரும்போதுகூட, இவர்கள் மீது சந்தேகம் வராமல் இருந்துள்ளது.. அதனால்தான் 10 வருட காலம் இப்படி ஏமாற்றி வந்துள்ளனர்.
-
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications