TNPSC குரூப் 1 தேர்வு! சிறுபான்மையின தேர்வர்களுக்கு வயது உச்சவரம்பை உயர்த்துக! காங்கிரஸ் டிமாண்ட்!
சென்னை: TNPSC குரூப் 1 தேர்வுக்கான வயது உச்சவரம்பை பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின தேர்வர்களுக்கு உயர்த்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் ஹிதாயத்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் 40 வயது என்றிருந்த வயது உச்சவரம்பை அதிமுக அரசு 35ஆக அரசியல் காரணத்திற்காக குறைத்தது எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசுக்கு அவர் எழுதியுள்ள கடிதம் வருமாறு;
''சமூக நீதிக்காக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்றோர்கள் தங்களின் வாழ்நாள் முழுவதும் ஆதிக்க சக்திகளை எதிர்த்து போராடி பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின் மக்களுக்கான உரிய இடத்தை பெற்றுத் தந்தனர். முந்தைய கலைஞர் ஆட்சியில் (2006-2011) TNPSC GROUP- I எழுத BC/MBC, SC/ST தேர்வர்களுக்கான வயது உச்சவரம்பை 35ல் இருந்து 40 ஆக உயர்த்தினார்கள். ''
''ஆனால் அடுத்து வந்த அதிமுக அரசு அரசியல் காரணங்களுக்காக வயது உச்சவரம்பை 35 என குறைத்தனர். (வயது உச்ச வரம்பு குறைப்பு என்பது இதுவரை எந்த மாநிலத்திலும் எப்போதும் நடந்ததில்லை) இதன் காரணமாக 35-40 வயதில் உள்ள BC/MBC, SC/ST தேர்வர்கள் பல ஆண்டுகளாக தங்களை தேர்வுக்கு தயார்படுத்திக் கொண்டவர்கள் தேர்வு எழுதும் வாய்ப்பினை இழந்தனர்.''
''அன்று முதல் இவ்வாறு பாதிக்கப்பட்ட தேர்வர்கள் வயது உச்சவரம்பை உயர்த்த கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு பின் வயது உச்ச வரம்பை 37 மற்றும் 39 என உயர்த்தியபோதும் இவ்வாறு பாதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு நிவாரணமோ, வாய்ப்புகளோ கிடைக்கப்பெறவில்லை. காரணம் 10 ஆண்டுகளுக்கும் மேலான கோரிக்கைகளுக்கு 4 ஆண்டுகள் மட்டுமே உயர்த்தியதால் பாதிக்கப்பட்ட தேர்வர்கள் மீண்டும் தேர்வு எழுதும் வாய்ப்பினை இழந்தனர்.தமிழ்நாட்டில் GROUP- I தேர்வு எழுத வயது உச்சவரம்பு 40 என இருந்த காலகட்டத்தில் மற்ற அனைத்து மாநிலங்களிலும் வயது உச்சவரம்பு 40க்கும் குறைவாகவே இருந்தது.''

'' ஆனால் தற்போது 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் வயது உச்சவரம்பு 45 முதல் 49 வரை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த தேர்வுகளில் தேர்வு அறிவிப்பில் இருந்து முடிவுகள் தெரிய சராசரியாக 2 முதல் 3 ஆண்டுகள் வரை ஆகியது. இதனால் தேர்வு எழுதும் வாய்ப்புகள் குறைந்ததோடு தேர்வர்களின் வயது வரம்பும் கடந்து போனது.''
''பொருளாதார காரணங்களால் தேர்வர்களின் ஒரு பகுதியினர், குறிப்பாக மகளிர் தங்களின் 30-வது அகவைக்குப் பின்னர் தான் இத்தேர்வினை எழுதுகின்றனர். மேற்கூறிய காரணங்களால் GROUP- I தேர்வு எழுத வயது உச்சவரம்பை 45 எனநிரந்தரமாகவோ அல்லது 49 வரை ஒரு முறையோ (One Time Measure) உயர்த்தி பாதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டுகிறோம்.''
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications