தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் பாலசுப்பிரமணியனின் நியமனம் ரத்து: ஹைகோர்ட்
சென்னை: தஞ்சை பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியனின் நியமனத்தை அதிரடியாக ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூரைச் சேர்ந்த பேராசிரியர் ரவீந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தஞ்சை பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியனின் நியமனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தராக டாக்டர் ஜி.பாலசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அவரது நியமனத்தில் விதிமீறல் உள்ளது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
உரிய கல்வித்தகுதி இன்றி, பாலசுப்பிரமணியன் துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும். எனவே அவரது நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் பேராசிரியர் ரவீந்திரன் தனது மனுவில் கூறியிருந்தார்.
பேராசிரியர் ரவீந்தினின் மனு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி வேலுமணி, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியனின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications