இதென்ன புதுசா இருக்கே! தமிழக அரசின் டெண்டரை எடுக்க சேலம் கம்பெனிக்கு இங்கிலாந்து வங்கி தந்த கேரண்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹைட்ரோ முறையிலான வெள்ள கட்டுப்பாட்டு மையம் அமைக்கும் திட்டத்திற்கான டெண்டரில் அரசின் விதிகளை எதிர்த்து சேலம் நிறுவனம் தொடர்ந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னையின் சில இடங்களில் உரிய தரவுகள் சேகரிப்பு மற்றும் வெள்ள கட்டுப்பாட்டு மையம் அமைப்பதற்காக டெண்டர் கோரப்பட்டது. இதற்கு சேலத்தை சேர்ந்த எஸ்.எஸ். டெக் என்ற நிறுவனமும் விண்ணப்பித்திருந்தது.டெண்டரின் போது செலுத்த வேண்டிய வங்கி உத்தரவாத தொகைக்காக இங்கிலாந்தை சேர்ந்த வங்கியை அந்த நிறுவனம் இணைத்திருந்தது. இதனையடுத்து, அந்நிறுவனத்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

High Court dismissed the plea filed by the Salem Company against the rules in the tender for the hydro base flood control center project

இதனை எதிர்த்து அந்த நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி என்.சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் சி.கதிரவன் ஆஜரானார். டெண்டரின் போது உத்தரவாத தொகைக்காக வெளிநாட்டு வங்கியை இணைத்தால் அந்த வங்கியின் கிளை இந்தியாவில் செயல்பட வேண்டும் என கூறினார்.

அவ்வாறு இல்லையென்றால் உள்ளூரில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட வங்கியிடம் உத்தரவாதத்தை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் தெரிவித்தார். இந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை என்பதற்காகவே எஸ்.எஸ். டெக் நிறுவனத்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக கூறினார். இதற்கு நிறுவன தரப்பு வழக்கறிஞர், தங்களுடைய வசதிகேற்ற வகையில் தான் வெளிநாட்டு வங்கியின் உத்தரவாதம் அளிக்கப்பட்டதாகவும் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது தவறு எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனையடுத்து , டெண்டர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து எஸ்.எஸ். டெக் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். உள்ளூரிலேயே தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகள் பல இருக்கும் போது சேலத்தை சேர்ந்த எஸ்.எஸ்.டெக் நிறுவனம் எதற்காக வங்கி உத்தரவாதத் தொகைக்காக இங்கிலாந்து வங்கியை இணைத்து விண்ணப்பம் செய்திருந்தது என்பது புரியாத புதிராக உள்ளது.

ஹைட்ரோ முறையிலான வெள்ள கட்டுப்பாட்டு மையம் அமைக்கும் திட்டத்திற்கான டெண்டரில் சேலத்தை சேர்ந்த எஸ்.எஸ்.டெக் நிறுவனம் மட்டுமல்லாமல் , இன்னும் பல நிறுவனங்கள் அரசின் விதிகளின் படி இல்லாததால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+