2 சீட் போட்டி.. விஜய்க்கு குட் நியூஸ்.. தேர்தல் செலவை திருப்பி வழங்க கோரிய வழக்கில் ஐகோர்ட் அதிரடி!
சென்னை: தேர்தல்களில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறுபவர்கள், ஒரு தொகுதியை ராஜினாமா செய்வதால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் தேர்தல் செலவை அவர்களே ஏற்க உத்தரவாதம் பெற வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஒரு நபர் 2 தொகுதிகளில் போட்டியிட தற்போதைய தேர்தல் சட்டம் அனுமதி வழங்குகிறது என்று நீதிபதிகள் எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு சுட்டிக்காட்டி, இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், மதுரை மேலூரைச் சேர்ந்த மணி என்பவர் தாக்கல் செய்த மனுவில், சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல்களில் சில வேட்பாளர்கள் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். அவர்கள் இரு தொகுதிகளிலும் வெற்றி பெறும் பட்சத்தில், ஒரு தொகுதி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.
அதனால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. எனவே, இரு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களிடம், ராஜினாமா செய்யும் தொகுதியின் தேர்தல் செலவுகளை ஏற்க வேண்டும் என உத்தரவாத பத்திரம் பெற வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் வேட்பாளர்கள் இரு தொகுதிகளில் போட்டியிட சட்டம் அனுமதியளிக்கிறது. இந்த சட்டப்பிரிவை எதிர்த்த வழக்கை உச்ச நீதிமன்றமே தள்ளுபடி செய்துள்ளது என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது தேர்தல் சட்டப்படி (Section 33(7) of RP Act) அனுமதிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களுக்காக, அரசியல் தலைவர்கள் 2 தொகுதிகளில் போட்டியிடுவார்கள். இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறும் பட்சத்தில், அதில் ஒரு தொகுதியை வைத்துக்கொண்டு மற்றொரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும்.
நாடு முழுவதும் பல்வேறு தலைவர்கள், ஒரே தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி 2014 மக்களவைத் தேர்தல்களில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். 2014-ல் வாரணாசி மற்றும் வதோதரா தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். பின்னர் ஒன்றை ராஜினாமா செய்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 1991 சட்டமன்றத் தேர்தலில், பர்கூர் மற்றும் காங்கேயம் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றி பெற்றார். தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும், சட்ட விதிகளின்படி காங்கேயம் தொகுதியை ராஜினாமா செய்தார்.
தவெக தலைவர் விஜய், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். விஜய் 2 தொகுதிகளில் போட்டியிடுவது விமர்சனங்களை எதிர்கொண்டது. இந்நிலையில் தான், 2 தொகுதிகளில் போட்டியிடுவோருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
குறை பிரசவத்தில் தவெக வெற்றி.. ஆட்சி நீடிக்காது.. திமுக சிவசங்கர் கணிப்பு -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications