களம் எட்டுல.. சேவல் சண்டை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி.. ஆனா சில நிபந்தனைகள்!
சென்னை: தைப்பூசத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் தங்கனூரில் சேவல் சண்டைப் போட்டிகளை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தைப்பூச திருவிழாவையொட்டி, திருவள்ளூர் மாவட்டம், தங்கனூரில் வரும் ஜனவரி 27, 28 ஆகிய தேதிகளில் சேவல் சண்டைப் போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி தேவாரம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் ஜனவரி 27, 28 ஆகிய தேதிகளில் தங்கனூரில் சேவல் சண்டை நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது என உத்தரவிட்டார். எனினும், சேவல் சண்டையின்போது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் போட்டிகளை உடனே நிறுத்த வேண்டும், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
மேலும், சேவல் சண்டை போட்டியின் போது, சேவல்களுக்கு மது வழங்கவோ, காலில் கத்தி கட்டவோ கூடாது, சாதிய ரீதியிலான தலைவர்களை புகழ்ந்து பாடல்களை ஒலிபரப்பக் கூடாது, பேனர்கள் வைக்கக்கூடாது என்ற நிபந்தனைகளையும் விதித்து, சேவல் சண்டை போட்டிகளை நடத்த அனுமதி வழங்கி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார். ஆண்டுதோறும் தைப்பூசத்தையொட்டி, தங்கனூரில் சேவல் சண்டை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications