Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விநாயகரா ஊர்வலம் போகச் சொன்னார்? மக்களுக்கு இதனால் பயன் உண்டா? ஹைகோர்ட் சரமாரி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுவதாக உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். சிலை வைத்து அதை ஊர்வலமாக எடுத்து செல்லும்படி விநாயகர் கூறவில்லை என தெரிவித்த நீதிபதி, இந்த கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பலன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் வரும் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. வீதி வீதிக்கு விநாயகர் சிலைகளை பிரம்மாண்டமாக வைத்து பூஜை செய்து அதை ஊர்வலமாக எடுத்துச்சென்று ஆறு குளங்கள் நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்வார்கள். விநாயகர் சிலை வைப்பதற்கும் ஊர்வலமாக செல்வதற்கும் தமிழக அரசு இடங்களை குறிப்பிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது.

High Court judge asked Did Ganesha go on a procession? What is the benefit to the people Vinayagar oorvalam

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கவுந்தபாடியில் 22 இடங்களிலும், திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் காவல் நிலையத்திற்குட்பட்ட 13 இடங்கள் மற்றும் கோவை மாவட்டம் சிறுமுகையில் 16 இடங்களிலும் சிலை வைத்து வழிபடுவதற்கும், ஊர்வலங்களுக்கும் அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் உள்ளூர் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராகவும், விநாயகர் சிலை வைப்பதற்கும், ஊர்வலத்திற்கும் அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செயப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் ஆஜராகி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டு அனைத்து அமைப்புகளும் சிலை வைக்க அனுமதிக்கப்படுவதாக கூறினார். மேலும், அந்தந்த பகுதிகளில் சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு சிலை வைப்பதற்கு அனுமதி கோரிய மனுக்கள் மீது உள்ளூர் போலிசார் அனுமதியளிப்பதாக தெரிவித்தார்.

இந்த வழக்கை பொறுத்தவரை கடந்த ஆண்டு சிலை வைக்கப்பட்ட இடங்களில் இந்த ஆண்டும் சிலை வைக்க அனுமதி அளிக்கப்படும் எனவும், ஈரோடு மாவட்டம் அன்னூரில் இருக்கும் நபர் கோவை மாவட்டம் சிறுமுகையில் சிலை வைக்க அனுமதி கோருவதாகவும் குறிப்பிட்டார்.

High Court judge asked Did Ganesha go on a procession? What is the benefit to the people Vinayagar oorvalam

இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தமிழக அரசின் அரசாணைக்கு மாறாக விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்தால் அந்த மனு ஏற்கப்படாது எனக்கூறி மனுக்களை முடித்து வைத்தார்.

மேலும், சிலை வைத்து அதை ஊர்வலமாக எடுத்து செல்லும்படி விநாயகர் கூறவில்லை என தெரிவித்த நீதிபதி, இந்த கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பலன் எனவும் காட்டாமாக கேள்வி எழுப்பினார்.

மேலும், விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுவதாக கூறிய நீதிபதி, இவை அனைத்தும் தனது சொந்த கருத்து மட்டுமே எனவும் குறிப்பிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+