Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் ரத்து- நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு.. ட்விஸ்ட் கொடுத்த மற்றொரு நீதிபதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். எனினும், இந்த அமர்வின் மற்றொரு நீதிபதியான பாலாஜி, மாறுபட்ட உத்தரவை வழங்கினார். இதன் காரணமாக 3வது நீதிபதி விசாரணைக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், போலீஸ் உயர் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாகவும், பெண் போலீசார் குறித்தும் அவதூறான கருத்துகளை தெரிவித்ததாகவும் கூறி கோவை சைபர் கிரைம் போலீசில், சப் இன்ஸ்பெக்டர் சுகன்யா புகார் அளித்தார்.

High court judge swaminathan order to cancel goondas act on savukku shankar

சவுக்கு சங்கர் கைது: இதனையடுத்து, சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கடந்த 4 ஆம் தேதி தேனியில் கைது செய்தனர். அவரை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து, பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசியதாக கோவை, சேலம், சென்னை, திருச்சி சைபர் க்ரைம் போலீசிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மொத்தமாக சவுக்கு சங்கர் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் அவர் மீது சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டம் பாய்ந்தது. சவுக்கு சங்கருக்கு எதிராக திருச்சியில் நடந்து வரும் வழக்கில் அவருக்கு மே 28 வரையில் நீதிமன்ற காவல் விதித்து திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே, தேனியில் சவுக்கு சங்கர் தங்கியிருந்த விடுதி மற்றும் அவரது காரை சோதனை செய்ததில் 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் ராஜரத்தினம் மற்றும் கார் ஓட்டுநர் ராம் பிரபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

பல்வேறு வழக்குகள்: மேலும், மதுரை மாவட்ட போதை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க தேனி பழனிசெட்டிபட்டி போலீசார் மனுத் தாக்கல் செய்தனர். 2 நாட்கள் விசாரணைக்கு அனுமதி அளிக்கப்பட்டு, நேற்றுடன் விசாரணை முடிவடைந்த நிலையில், மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கில் சவுக்கு சங்கர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த மனு நேற்று வியாழக்கிழமை மதுரை மாவட்ட போதை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கால அவகாசம் கோரினார். இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணை மே 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குண்டர் சட்டம்: இந்நிலையில், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை மனு தாக்கல் செய்தார். பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த 12 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்த நிலையில், அதனை ரத்து செய்து, தனது மகனை விடுவிக்க வேண்டும் எனக் கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

சவுக்கு சங்கரின் தாயார் மனு: சவுக்கு சங்கரின் தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்து தனது மகனை ஒவ்வொரு ஊராக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வருவதாகவும், காவல்துறையினர் தாக்கியதில் காயமடைந்த மகனுக்கு முறையான மருத்துவச் சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

மேலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தனது மகன் செயல்படவில்லை என்றும், சட்டப்படியான நடைமுறைகளை பின்பற்றாமல் தனது மகனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதமானது என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐகோர்ட்டில் விசாரணை: இந்நிலையில், இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகிய அடங்கிய அமர்வுக்கு முன் நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் பிற்பகல் 2:15 மணிக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு சென்னை மாநகர காவல் ஆணையர் தரப்பு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகலில் நடைபெற்ற விசாரணையில், எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வீர்கள்? என்னவெல்லாம் செய்ய மாட்டீர்கள் என்று உத்தரவாதம் அளித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று சவுக்கு சங்கருக்கு உத்தரவிட்டனர்.

இன்று விசாரணை: மேலும் தமிழக முதல்வரை ஒருமையில் அழைத்துள்ளதாக கூறிய நீதிபதிகள், அதை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் இதுசம்பந்தமாக அவரை இன்று மாலையே சந்தித்து உத்தரவாதம் பெற்று பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என சவுக்கு சங்கர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அதுசம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கும்படி அரசு குற்றவியல் வழக்கறிஞருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையையும் இன்றைக்கு (வெள்ளிக்கிழமை) தள்ளி வைத்தனர்.

இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று காலை தொடங்கி நடைபெற்றது. சவுக்கு சங்கரின் தாய் தரப்பில், சவுக்கு சங்கர் கருத்தால் எந்த சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படவில்லை. பொது சொத்துக்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் முன் 4 வழக்குகளில் கைது செய்யப்பட்டார். அந்த வழக்குகள், குண்டர் சட்ட உத்தரவில் குறிப்பிடவில்லை என வாதிடப்பட்டது.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், அனைத்து நடைமுறையும் பின்பற்றி தான் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் பேச்சால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மாறுபட்ட உத்தரவு: அப்போது, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்வதற்கு முன் இறுதி விசாரணை நடத்தலாமா என்ற விஷயத்தில் நீதிபதிகள் இடையே மாறுபட்ட கருத்து நிலவியது. தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்வதற்கு முன் வழக்கை இறுதி விசாரணைக்கு எடுக்க அவசியம் இல்லை என்று நீதிபதி பாலாஜியும், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யாவிட்டாலும் இன்றே இறுதி விசாரணை நடத்தலாம் என்று நீதிபதி சுவாமிநாதனும் தெரிவித்தனர். இந்த மனு மீதான உத்தரவை பிற்பகலுக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டனர்.

அதன்படி சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு அளித்துள்ளது. நீதிபதி சுவாமிநாதனும், நீதிபதி பாலாஜியும் மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளனர்.

குண்டர் சட்டத்தை ரத்து செய்த சுவாமிநாதன்: குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவில் போதைப்பொருள் வழக்கை குறிப்பிடவில்லை என்றும், மனதை செலுத்தாமல் பிறப்பிக்கப்பட்ட குண்டர் சட்ட உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் நீதிபதி சுவாமிநாதன் தெரிவித்தார்.

சவுக்கு சங்கர் மீது குண்டாஸ்.. 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு! 3வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை!


அதிகாரம் மிக்க நபர்கள் இந்த வழக்கு தொடர்பாக தன்னிடம் பேசியதால் தான் அவசரமாக இந்த வழக்கை இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாக நீதிபதி சுவாமிநாதன் விளக்கம் அளித்தார்.

நீதிபதி பாலாஜி உத்தரவு: அதேசமயம், சவுக்கு சங்கரின் தாய் மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு அனுமதியளித்த பின் ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என நீதிபதி பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

சவுக்கு சங்கரை கோவை சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என இரு நீதிபதிகளும் ஒருமித்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு அளித்ததன் காரணமாக வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 3வது நீதிபதி விரைவில் விசாரணை நடத்த உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+