Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சவுக்கு சங்கர் மீது குண்டாஸ்.. 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு! 3வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்த வழக்கில் சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் அமர்வின் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

தனியார் யூடியூப் சேனலில் ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில், பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது கோவை சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்..

Savukku Shankar Goondas Act and Final hearing today in Madras High Court Over savukku shankar mother surety petition

அசல் ஆவணங்கள்: ஆனால், தன்னுடைய மகனை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சவுக்கு சங்கரின் அம்மா, கமலா சென்னை ஹைகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் நேற்று பிற்பகல் 2.15 மணிக்கு தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையர் தரப்பிற்கு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, மறுபடியும் பிற்பகல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகர காவல் ஆணையர் தரப்பில், குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன.

ஆவணங்கள்: அப்போது அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்த பிறகு, இந்த வழக்கை நாளை அதாவது இன்று மே 24 விசாரிப்பதாகக் கூறி, இறுதி விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இதனிடையே, கோவை சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டது தொடர்பாக அளித்த புகார் குறித்து விசாரணை நடத்தும்படி தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, அவரது அம்மா கமலா, தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு மீதான விசாரணையையும் இன்றைய தினம் தள்ளிவைப்பதாக உத்தரவிட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி அமர்வில், இன்று மீண்டும் விசாரணை வந்தது.

சொத்துக்கள்: அப்போது சவுக்கு சங்கரின் தாய் தரப்பில், சவுக்கு சங்கர் கருத்தால் எந்த சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படவில்லை. பொது சொத்துக்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் முன் 4 வழக்குகளில் கைது செய்யப்பட்டார். அந்த வழக்குகள், குண்டர் சட்ட உத்தரவில் குறிப்பிடவில்லை என வாதிட்டார்.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், அனைத்து நடைமுறையும் பின்பற்றி தான் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் பேச்சால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரி பத்திரிக்கையாளர் சந்தியா ரவிசங்கர் மற்றும் தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி ஆகியோர் தரப்பில் முறையிடப்பட்டது.

பத்திரிகையாளர்கள் இடையீட்டு மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் மற்றும் செல்வி ஜார்ஜ் ஆகியோர், பிளாக்மெயிலரான சவுக்கு சங்கரால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் தங்களுடைய மனுவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மேலும், தொடர்ச்சியாக பத்திரிகையாளர்கள், காவல்துறையினர் மற்றும் நீதித்துறையினர் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவதால், அவர் தண்டிக்கப்பட வேண்டிய நபர் என தெரிவித்தனர்.

இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்வதற்கு முன்னர் இறுதி விசாரணை நடத்துவது தொடர்பாக, தங்களுக்கிடையே மாறுபட்ட கருத்துக்கள் உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி சுவாமிநாதன், இந்த மனு மீது இன்று பிற்பகல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

உத்தரவு: இதற்கிடையில், கோவை சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டது தொடர்பாக அளித்த புகார் குறித்து விசாரணை நடத்த தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அவரது தாய் கமலா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சவுக்கு சங்கர் தாய் கொடுத்த புகார் மனு குறித்து நான்கு மாதத்தில் விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.

முன்னதாக நேற்றைய தினம், கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் ஜாமீன் கோரிய நிலையில், ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 27ம் தேதிக்கு தள்ளிவைத்து மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு: சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு அளித்துள்ளனர்.

குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். சவுக்கு சங்கரின் தாய் மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு அனுமதியளித்த பின் ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என நீதிபதி பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதி சுவாமிநாதன்: குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவில் போதைப்பொருள் வழக்கை குறிப்பிடவில்லை என்றும், மனதை செலுத்தாமல் பிறப்பிக்கப்பட்ட குண்டர் சட்ட உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் நீதிபதி சுவாமிநாதன் தெரிவித்தார்.

அதிகாரம் மிக்க நபர்கள் இந்த வழக்கு தொடர்பாக தன்னிடம் பேசியதால் தான் அவசரமாக இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாக நீதிபதி சுவாமிநாதன் விளக்கம் அளித்தார்.

3வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை: சவுக்கு சங்கரை கோவை சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என இரு நீதிபதிகளும் ஒருமித்த கருத்தில் உத்தரவிட்டுள்ளனர். இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு காரணமாக வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் 3வது நீதிபதியின் முடிவை வைத்தே, இந்த வழக்கின் இறுதி உத்தரவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாம்.

முன்னதாக, கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் ஜாமீன் கோரிய நிலையில், ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 27ம் தேதிக்கு தள்ளிவைத்து மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+