சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்!
சென்னை: முதல்வர் விஜய் ஒவ்வொரு நாளும் சினிமா நட்சத்திரங்களை சந்தித்து வரும் நிலையில், தவெகவில் இணையும் மூத்த நிர்வாகிகளை சந்திக்க மறுத்து வருகிறார். இதனால் தவெகவில் இணையும் முடிவில் இருக்கும் அதிமுகவினர் கூட, அங்கு சென்றால் மரியாதை இருக்குமா என்ற சந்தேகத்தை எழுப்ப தொடங்கி இருக்கின்றனர்.
சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெகவின் தற்போதைய செயல்பாடுகள், அக்கட்சியில் இணையக் காத்திருக்கும் பிற கட்சி மூத்த தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களை முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

நேற்றும் கூட சிம்ரன், சிம்பு உள்ளிட்டோரை முதல்வர் விஜய் சந்தித்திருந்தார். ஒவ்வொரு நாளும் சினிமா குடும்பங்களை சந்திப்பதை விஜய் வாடிக்கையாக வைத்துள்ளார். ஆனால் மாற்று கட்சிகளில் இருந்து தவெகவில் இணையும் மூத்த அரசியல் நிர்வாகிகளைச் சந்திக்கத் தொடர்ந்து மறுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைமைச் செயலகத்திலோ அல்லது பனையூர் இல்லத்திலோ சினிமா பிரபலங்கள் கேட்கும் போதெல்லாம் முதல்வர் விஜய் உடனடியாகச் சந்திப்புக்கான நேரத்தை ஒதுக்கி விடுகிறார். இந்த பாராமுகம் காரணமாக, அதிமுகவில் இருந்து தவெகவுக்கு வரத் திட்டமிட்டிருந்த முக்கிய புள்ளிகள் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய தொடங்கியுள்ளனர்.
அதிமுகவில் இருந்து தவெக பக்கம் வந்த கடம்பூர் ராஜூ, சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட எந்த முக்கிய நிர்வாகிகளையும் இதுவரை விஜய் சந்திக்கவில்லை. அவர்கள் அனைவருமே புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் முன்னிலையிலேயே தவெகவில் இணைக்கப்பட்டு வருகின்றனர்.
சினிமா பிரபலங்கள் உடனான சந்திப்புகள் சோசியல் மீடியாவில் தவெக தொண்டர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆனால் இதுவே கட்சியின் உண்மையான அரசியல் நகர்வுகளுக்குப் பின்னடைவாக மாறத் தொடங்கியுள்ளது என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அதிமுக மற்றும் திமுகவில் இருந்து முக்கியத் தலைவர்கள் தவெகவை நோக்கி படையெடுக்க தொடங்கி இருக்கின்றனர்.
அவர்களுக்கு முதல்வர் தரப்பில் இருந்து முறையான அழைப்போ அல்லது சந்திப்புக்கான நேரமோ வழங்கப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. உள்கட்சி மோதல்களால் அதிமுகவிலிருந்து வெளியேறி தவெகவில் இணைந்து களம் காணலாம் என்று கணக்குப்போட்ட ராயப்பேட்டை நிர்வாகிகள் பலர், தற்போதைய நிலவரத்தைக் கண்டு பின்வாங்கத் தொடங்கியுள்ளனர்.
சினிமா ஆட்களுக்குக் கொடுக்கும் மரியாதையில் ஒரு சதவிகிதத்தைக் கூட பல ஆண்டுகள் அரசியலில் பழுத்த பழமாக இருக்கும் மூத்த நிர்வாகிகளுக்கு விஜய் தருவதில்லை. இந்த லட்சணத்தில் அங்கு சென்றால் நமக்கு என்ன மரியாதை கிடைக்கும்?" என்று அதிமுகவினர் ஓப்பனாகவே கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
"விஜய் இன்னும் சினிமா வட்டாரத்தை விட்டுக் கார்ப்பரேட் அரசியலில் இருந்து வெளியே வரவில்லை. மாற்றுக்கட்சித் தலைவர்களை அரவணைக்கத் தவறினால், வெறும் ரசிகர் மன்ற நிர்வாகிகளை மட்டுமே வைத்துக் கொண்டு அவரால் நீண்ட காலம் ஆட்சியைத் தக்க வைக்க முடியாது" என அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
-
எங்கே போனார்கள் சிங்கப்பெண்கள்? ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்.. தமிழகத்தில் பேரதிர்ச்சி -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
தமிழக அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை.. பட்ஜெட் வரை அடக்கமா இருங்க.. இல்லைன்னா காலி! -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
“அமைச்சரவையில் இடம்பெறுவோம்.. ஆனால்!” நிலைப்பாட்டை விளக்கிய.. சிபிஎம், சிபிஐ தலைவர்கள்!












Click it and Unblock the Notifications