"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"
சென்னை: தமிழக அரசியலில் தற்போது அதிகம் பேசப்படும் விஷயங்களில் ஒன்றாக "வெற்றி தொலைக்காட்சி" மாறியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் வரலாற்று வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய தமிழக வெற்றிக் கழகம், தற்போது தனது அடுத்த பெரிய நகர்வாக ஊடக உலகில் களமிறங்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, தவெகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொலைக்காட்சியாக "வெற்றி தொலைக்காட்சி" தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஜூன் 22-ஆம் தேதி இந்த சேனலின் லோகோ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் சேனலுக்கான அலுவலகம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்யின் நீண்டகால அரசியல் திட்டம்
தமிழக அரசியலை திரும்பிப் பார்த்தால், பெரிய அரசியல் கட்சிகளுக்கு பின்னால் ஒரு ஸ்ட்ராங்கான ஊடக பலம் இருந்திருக்கிறது. திமுகவுக்கு கலைஞர் டிவி..., அதிமுகவுக்கு ஜெயா டிவி..., பாமகவுக்கு மக்கள் டிவி... கேப்டன் விஜயகாந்த்க்கு கேப்டன் டிவி என கட்சிகளின் குரலாக செயல்பட்ட ஊடகங்கள் இருந்துள்ளன.
அதேபோல், தமிழக வெற்றிக் கழகமும் தற்போது தனது அரசியல் பயணத்தை நீண்டகால அடிப்படையில் கட்டமைக்கும் முயற்சியாக "வெற்றி டிவி"யை கொண்டு வருகிறதா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
ஏன் இப்போது ஒரு சேனல்?
ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு அரசுத் திட்டங்கள், நலத்திட்ட அறிவிப்புகள் மற்றும் அரசியல் சர்ச்சைகள் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவுகின்றன. அவற்றுக்கு உடனடியாக பதிலளிக்கவும், அரசின் நிலைப்பாட்டை நேரடியாக மக்களிடம் கொண்டு செல்லவும் ஒரு தனி ஊடக தளம் தேவைப்படுவதாக தவெக வட்டாரங்கள் கருதுவதாக கூறப்படுகிறது. அதனால்தான் 24 மணி நேர செய்தி மற்றும் அரசியல் விவாத சேனலாக வெற்றி டிவி உருவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெற்றி டிவியில் என்னென்ன வரும்?
சாதாரண செய்திச் சேனலாக அல்லாமல், மக்கள் மையப்படுத்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
* அரசு திட்டங்கள் குறித்த நேரடி ரிப்போர்ட்கள்
* முதல்வர் விஜய்யின் சிறப்பு பேட்டிகள்
* இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு நிகழ்ச்சிகள்
* மாணவர் விவாதங்கள்
* விவசாய சிறப்பு நிகழ்ச்சிகள்
* பெண்கள் முன்னேற்றம் குறித்த தொடர்கள்
* அரசியல் நேர்காணல்கள்
* கிரவுண்ட் ரிப்போர்ட் நிகழ்ச்சிகள் போன்றவை இடம்பெறலாம் என்று ஊடக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
ரசிகர்கள் கருத்து
"வெற்றி டிவி" என்ற பெயர் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. விஜய் ரசிகர்கள், "இது வெறும் டிவி சேனல் அல்ல... தவெகவின் அடுத்த கட்ட அரசியல் ஆயுதம்" என்று பதிவிட்டு வருகின்றனர். மற்றொரு தரப்பினர், "சேனல் தொடங்குவது எளிது... மக்கள் நம்பிக்கை பெறுவது தான் சவால்" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஜூன் 22-ஆம் தேதி லோகோ அறிமுகம் குறித்த தகவல்கள் பரவி வரும் நிலையில், அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களின் கவனம் தற்போது முழுவதும் "வெற்றி டிவி" மீதே திரும்பியுள்ளது.
சினிமாவில் வசூல் சாதனை படைத்த விஜய்... அரசியலில் ஆட்சியை பிடித்த விஜய்... அடுத்ததாக ஊடக உலகிலும் தனது முத்திரையை பதிக்கப் போகிறாரா? என்பதே தற்போது பரபரப்பாக பேசப்படும் கேள்வியாக மாறியுள்ளது.
-
சென்னையில் பில்டிங் கட்டுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. முதல்வர் விஜய் உத்தரவு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
விஜய் பர்த்டே ஸ்பெஷல்: இரண்டு ‘விஜயபாஸ்கர்’களின் அதிரடி மூவ்! இத்தனை இடிக்கு எடப்பாடி தலை தாங்குமா? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வரவு வைப்பு! 2வது மாதமாக பணத்தை போட்டது தவெக அரசு! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
நாய்க்கு பிரியாணி.. மக்களை இழிவுபடுத்திப் பேசிய ராகவா லாரன்ஸ்! எழுந்த கண்டனம்.. பறந்த விளக்கம்! -
எந்த முதல்வரும் செய்யாத மூவ்.. உள்ளாட்சித் துறையை முதல்வர் விஜய் தன்வசம் வைத்திருப்பது ஏன்? பின்னணி -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
செங்கோட்டையன் டக்னு விஜய் பாலாஜியை கட்டிப்பிடித்து, "தட்டி எறிஞ்சு கலக்கிட்டீங்களாமே"! அமைச்சர் குஷி -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
அந்த குழந்தையே நீங்க தான் சார்.. தவெக கூட்டணி.. துரை வைகோ கொடுத்த ஹின்ட் -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு!














Click it and Unblock the Notifications