சிறுமி பாலியல் வழக்கு.. பாஜக நிர்வாகிக்கு ஜாமீன் மறுத்த ஐகோர்ட் கிளை!
சென்னை: பாலியல் வழக்கில் சிறையில் உள்ள பாஜக பொருளாதார பிரிவு மாநில தலைவர் ஷாவுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் மறுத்துள்ளது.
பாஜக பொருளாதார பிரிவு மாநில தலைவராக பதவி வகித்து வருபவர் எம்.எஸ்.ஷா. இவர் மதுரை திருமங்கலம் பகுதியில் அமைந்துள்ள பிரபலமான தனியார் கல்லூரியின் தலைவராக இருந்து வருகிறார். பாஜக தலைவர்களோடு நெருக்கமாக இருந்து வரும் எம்.எஸ். ஷா, அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.

எம்.எஸ்.ஷா மீது 15 வயது பள்ளி மாணவி ஒருவரின் தந்தை, மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது மகளின் செல்போனுக்கு, பாஜக பிரமுகர் எம்.எஸ் ஷாவின் செல்போன் எண்ணில் இருந்து தொடர்ந்து ஆபாசமான மெசேஜ்கள் வந்ததாகவும், இதையடுத்து தனது மகளிடம் கேட்டபோது பாஜக பிரமுகர் எம்.எஸ்.ஷா அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரியவந்ததாக கூறியிருந்தார்.
புகார் அளித்த நபர் தனது மனைவி, மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லாமல் அடிக்கடி தனியார் சொகுசு விடுதிகளுக்கு அழைத்துச் சென்று, பாஜக பிரமுகருடன் தனியாக இருந்து வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், வாட்ஸ் அப் மூலமாக, நான் அழைக்கும் இடத்திற்கு வந்து என்னுடன் தங்கினால் பைக் வாங்கித் தருகிறேன் என்று ஆசை வார்த்தையைக் கூறி அழைத்துச் சென்று 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து வேறு மாநிலங்களுக்கும் அழைத்துச் சென்று தனியார் சொகுசு விடுதியில் தங்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு, சிறுமிக்கு புதிய ஆடைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வாங்கி கொடுத்துள்ளார். பாஜக பிரமுகர் எம்.எஸ். ஷா, முதலில் தனது மனைவியிடம் கடனை அடைத்து விடுவதாகக் கூறி திருமணத்தை மீறிய உறவில் இருந்ததோடு மனைவியின் மூலமாக தனது மகளையும் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதற்கு தனது மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார் என புகாரில் தெரிவித்தார்.
சிறுமியின் தந்தை அளித்த இந்த புகாரின் அடிப்படையில் பாஜக நிர்வாகி எம்..எஸ். ஷா மீதும், மாணவியின் தாய் மீதும் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, புகார் அளித்த தந்தையின் மீதே, மகள் மூலம் புகார் அளிக்கப்பட்டு அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்தியதில், சிறுமியின் தந்தை மீதான குற்றச்சாட்டு பொய் என தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறுமி, அவரது தாயாரிடம் விசாரணை நடத்திய போலீசார், பாஜக நிர்வாகி எம்.எஸ் ஷா மீதும், சிறுமியின் தாயார் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த எம்.எஸ்.ஷாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார் பாஜக மாநில நிர்வாகி ஷா. அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்த ஐகோர்ட் கிளை, இந்த வழக்கின் விசாரணையை வரும் மார்ச் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
-
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள்












Click it and Unblock the Notifications