அனைத்து சாதியினரும் அர்ச்சகர் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு! ஐகோர்டில் இன்று பரபர வாதம்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், இன்று ஐகோர்ட் மதுரையில் கிளையில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.
கடந்த 2007இல் தமிழ்நாட்டில் முதலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்காக அப்போது தமிழகத்தில் 6 இடங்களில் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளும் தொடங்கப்பட்டன.

இதற்கு அப்போது கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அடுத்தடுத்து மாணவர் சேர்க்கை நடக்கவில்லை. இதற்கிடையே ஸ்டாலின் முதல்வரான பிறகு, மீண்டும் அர்ச்சகர் பள்ளி திறக்கப்பட்டு 151 பேர் சேர்க்கப்பட்டனர்.
மேலும், 28 பேருக்குப் பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டது. அறநிலையத்துறை கோயில்களில் அர்ச்சகர்கள் நியமன விதிமுறைகளும் வகுக்கப்பட்டன. இது ஒரு பக்கம் இருக்க இதற்கு எதிராகப் பலரும் தொடர்ந்து வழக்கு தொடர்ந்து வருகின்றனர். அதன்படி திருச்செந்தூரை சேர்ந்த வீரபாகு மற்றும் ஹரிஹர சுப்பிரமணி ஆகியோர் இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில் தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் படி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற பயிற்சி திட்டத்தின் கீழ் பயிற்சி முடித்தவர்களை மூத்த அர்ச்சகர்கள் கீழ் பயிற்சி அர்ச்சகராக நியமிக்கக் கடந்த மாதம் அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் ஆகம வேத விதிகளை முழுமையாகப் படித்த பல்லாயிர திரிபுரா சுந்தரர் உள்ள நிலையில், இந்த புதிதாக நியமனம் தேவையற்றது என்று அதில் கூறப்பட்டிருந்தது.
மேலும், ஆகமங்களைப் படிக்க 5, 6 ஆண்டுகள் ஆகும் என்றும் ஒரு வருடப் பயிற்சியில் எந்த வேதத்தையும் முழுமையாகக் கற்க முடியாது என்று கூறப்பட்டிருந்தது. மேலும், பயிற்சி அர்ச்சகராக நியமனம் செய்யப்படுவோருக்குக் கோயில் நிதியிலிருந்து 8,000 சம்பளம் என்பதும் ஏற்கத்தக்கது இல்லை எனத் தெரிவித்தார். எனவே, இந்த அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் நேற்று முதற்கட்ட விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று விசாரணை தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசின உத்தரவில் ஆகம விதிகள் எதுவும் மீறப்படவில்லை என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசு தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இரு தரப்பிலும் வாதங்கள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை சென்னை ஐகோர்ட் மதுரை கிளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications