கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசவே கூடாது.. தனபாலுக்கு நிரந்தர தடை!
சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்திப் பேச கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்றும் அவர் சொல்லித்தான் எனது சகோதரர் கனகராஜ் சில காரியங்களை செய்ததாகவும், டிரைவர் கனகராஜின் சகோதரர் தனபால் செய்தியாளர் சந்திப்பின்போது கூறி வந்தார். உதயநிதி ஸ்டாலின் உட்பட திமுகவினரும் கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்து பேசி வந்தனர்.

இந்நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச ஓட்டுநர் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் தனது செல்வாக்கை குறைக்கும் வகையில் தனபால் பேசி வருகிறார் என்றும் தனக்கு ரூ.1.10 கோடி நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிடக்கோரியும் மனுவில் தெரிவித்திருந்தார் எடப்பாடி பழனிசாமி.
கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச கனகராஜனின் சகோதரர் தனபாலுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபால் 2 வாரங்களில் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், கோடநாடு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்திப் பேச கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நிரந்தர தடையாக விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இடைக்கால தடை உத்தரவை நிரந்தர தடையாக மாற்றி ஆவணங்களை பதிவு செய்வதற்காக இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பற்றிப் பேச திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications