போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை.. போலீஸ்க்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை: சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டத்தை நடத்த அனுமதிக்க முடியாது என்றும், அனுமதிக்கப்பட்ட இடத்தில் தூய்மை பணியாளர் போராட்டங்களைதொடர அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. 13-வது நாளாக இன்றும் தூய்மை பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 13 வது நாளாக இன்றும் சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக தேன்மொழி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அனுமதிக்கப்படாத இடத்தில் தூய்மை பணியாளர்கள் போராட அனுமதி கிடையாது என்று கூறியது.
மேலும் அனுமதி இன்றி சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என காவல்துறையினருக்கு உத்தரவிட்டனர். மேலும் அனுமதிக்கப்பட்ட இடத்தில் தூய்மை பணியாளர்கள் போராட எந்த தடையும் இல்லை எனவும், அங்கு அவர்கள் போராட்டத்தை தொடரலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
எனினும் தூய்மை பணியாளர்கள் எங்களது கோரிக்கைகள் நிறைவேறாதவரை இங்கிருந்து கிளம்ப மாட்டோம் என்றும் தொடர்ந்து போராடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications