கிருஷ்ணகிரி மாங்கனி திருவிழா.. பாமக வைத்த முக்கியமான கோரிக்கை.. ஹைகோர்ட் நிராகரிப்பு
சென்னை: கிருஷ்ணகிரியில் நடைபெறும் அகில இந்திய அளவிலான மாங்கனி திருவிழாவை வேறு இடத்திற்கு மாற்றக்கோரிய பாமகவின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பா.ம.க வின் மத்திய மாவட்ட செயலாளர் இளங்கோ என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் அகில இந்திய அளவில் மாங்கனி திருவிழா, கிருஷ்ணகிரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டு வருவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய அளவில் சிறப்பு பெற்ற இத்திருவிழாவில் கடந்த ஆண்டு சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளதாகவும்,
திருவிழா நடைபெறும் அப்பள்ளியானது மாவட்டத்தின் பிரதான இடத்தில் இருப்பதாகவும், அதற்கு செல்லும் பாதை 12அடியில் குறுகலாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே அருகில் இருக்கும் தனியார் நிலத்தில் பாதைக்காக கூடுதல் நிலம் வாடகைக்கு எடுக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது அந்த இடத்தில் கட்டிடங்கள் வந்ததால், அவ்விடத்தில் திருவிழா நடத்தினால் போக்குவரத்து நெரிசல், வாகன நிறுத்துமிடம் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.ஆகவே மாங்கனி திருவிழாவை வேறு இடத்தில் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபுர்வாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதில், அரசு சார்பில் ஆஜரான பி.முத்துக்குமார், கடந்த 28ஆண்டுகளாக வெற்றிகரமாக மாம்பழ திருவிழா நடத்தப்பட்டுள்ளதாகவும்,இந்த ஆண்டு நாளை முதல் 30ஆம் தேதி வரை திருவிழா நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இத்திருவிழாவில் பலவகையான மாம்பழங்கல் காட்சிக்கு வைக்கப்பட உள்ளதாகவும், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக, போக்குவரத்து காவல்துறை உதவியுடன் சிறப்பான ஏற்பாடுகளாக திருவிழாவிற்கு வரும் வழி, வெளியில் செல்லும் வழி, கண்காணிப்பு கோபுரம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் பொதுமக்களை பாதிக்காத வகையில் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், வேறு இடத்திற்கு மாற்றக்கோரி பாமக சார்பில் தொடர்ந்த கோரிக்கையை நிராகரித்தும், மனுவை முடித்து வைத்தும் உத்தரவிட்டனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications