ஈரோட்டில் பெரிய இடி.. தமிழ்நாட்டுக்கே வியர்த்து கொட்டுது.. திகைத்த போன மீனவர்கள்.. இதென்ன திடீர்னு ?
சென்னை: தமிழகத்தின் வெப்பநிலையானது மெல்ல மெல்ல உயர அதிகரிக்க துவங்கி உள்ள நிலையில், வானிலை மையம் முக்கிய அலர்ட் ஒன்றை விடுத்துள்ளது.
கடந்த 2 வருடங்களை காட்டிலும் இந்த வருடம் கோடையானது, மிகுந்த வெப்பமாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.. ஏற்கனவே 2 முதல் மூன்று டிகிரி வெப்பநிலை அதிகமாக வீசிக் கொண்டிருக்கும் நிலையில், எல் நினோ வானிலை நிகழ்வு கோடையின் இறுதி வரை இருக்கும் என்கிறார்கள்.

வெப்ப நாட்கள்: அந்தவகையில், மார்ச் முதல் வாரத்தில் வெப்பமான நாட்கள் துவங்கக்கூடும் என்றும், அந்த நேரங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தொடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இன்றைய தினம் மார்ச் துவங்கி உள்ளது.. இந்த வாரத்தில் கோடையின் துவக்கம் ஆரம்பமாகிவிடும் என்பதால், வெப்பம் 35 டிகிரி செல்சியஸிலிருந்தே துவங்கக்கூடுமாம். பிறகு மார்ச் மாதத்தின் இரண்டாம் வாரம் துவங்கி அதற்கு பின்னர் வரும் நாட்களில் 34 முதல் 36 டிகிரி செல்சியஸ் ஆக வெப்பம் இருக்கக்கூடும் என்றும், ஏப்ரல் மாதத்தில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதற்கும் மேலே போக வாய்ப்புள்ளது..
ஆய்வாளர்கள்: அதுமட்டுமல்ல, கோடை மழைக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லையாம். ஏப்ரல் - மே ஆகிய மாதங்களில் மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வாளர்கள் தொடர்ந்து சொல்கிறார்கள். இந்நிலையில், தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் மீண்டும், அடுத்தடுத்து வரும் சில நாட்களுக்கான வானிலை அறிக்கை விவரங்களை வெளியிட்டிருக்கிறது.
அதில், "கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் வெப்பநிலையானது மெல்ல மெல்ல உயர அதிகரிக்க துவங்கி உள்ளது.. இன்று முதல் மார்ச் மாதம் ஆறாம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 38.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.
வட தமிழகம்: குறிப்பாக தென் தமிழக மற்றும் வட தமிழகத்தில் உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை ஆனது இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.
இதனைத் தொடர்ந்து தமிழக கடலோரப் பகுதிகளான மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகள், தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று 65 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்பதால் இன்று மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்" என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டம்: இன்று முதல் மார்ச் மாதம் 6 தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்பதுடன், தமிழகத்திலேயே அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளது, அம்மாவட்ட மக்களுக்கு கிலியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications