திடீரென சென்னை, கோவையில் உயரும் தொற்று.. என்ன காரணம்.. தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
கோவையில் தடுப்பூசி செலுத்தும் பணி துரிதமாகி வருகிறது
சென்னை: தமிழகத்தில் கோவையிலும், சென்னையிலும் கொரோனா தொற்று விகிதம் அதிகரித்துள்ளது பீதியை கிளப்பி வருகிறது.
தற்போது தொற்று பாதிப்பானது தமிழகம் முழுவதும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.. ஆனாலும் ஒருசில மாவட்டங்களில் தொற்று மீண்டும் தலைதூக்கி வருகிறது.
நேற்று மட்டுமே ஒருநாள் பாதிப்பு என்பது 1,575-லிருந்து குறைந்து 1,592 ஆக பதிவாகியுள்ளதுதான் அதிர்ச்சியை தந்துள்ளது.. இது நேற்று முன்தினம் எண்ணிக்கையை விட கொஞ்சம் அதிகமாகும்... நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,62,119 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

உயிரிழப்பு
சென்னையில் மட்டும் நேற்று 165 பேருக்கு கொரோனா கேஸ் பதிவாகி உள்ளது.. அதேசமயம், நேற்று முன்தினம், சென்னையில் ஒருநாள் பாதிப்பு என்பது 167 என்று இருந்த நிலையில், நேற்று குறைந்துள்ளது.. எனினும், தமிழகத்தில் ஒரேநாளில் நேற்று 18 பேர் உயிரிழந்துள்ளனர்.. சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 16,282 ஆக உள்ளது.

கோவை
கோவையில் ஒரே நாளில் 229 பேரும், செங்கல்பட்டில் ஒரே நாளில் 127, ஈரோட்டில் 104 பேரும் என அடுத்தடுத்த பாதிப்பு நிலையில் உள்ளனர். அதாவது முதலிடத்தில் கோவையும் அடுத்ததாக சென்னையும் உள்ளதுதான் கலக்கத்தை தந்து வருகிறது.. தற்போது 3 வது அலை பரவல் வர உள்ளதாக எச்சரிக்கைகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போதைய பாதிப்பானது உயர்ந்தபடியே வருகிறது.

முன்னேற்பாடுகள்
பக்கத்து மாநிலமான கேரளாவில் கடந்த சில நாட்களாகவே தினசரி பாதிப்பு ஆயிரத்தைக் கடந்து வந்தது.. இந்நிலையில் கடந்த 2 நாட்களாகத்தான் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது.. எனினும் அந்த மாநில பாதிப்பு கோவை பக்கம் வந்துவிடக்கூடாது என்பதால் தீவிர முன்னேற்பாடுகள் கையில் எடுக்கப்பட்டுள்ளன.. அனைத்து செக்போஸ்ட்களிலும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

விடுமுறை
இதனிடையே, கோவை மாவட்டம் சூலூர் அருகே சுல்தான்பேட்டை அரசு பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது... ஆனால் அந்த 3 மாணவர்களுக்கும் அறிகுறிகளே இல்லையாம்.. டெஸ்ட் எடுத்தபிறகுதான் கொரோனா உறுதியாகியுள்ளது...
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications