"சிவப்பு" தக்காளி.. தாறுமாறான விலை.. "இந்த" ஒரு ஊரில் மட்டும் தக்காளி விலை குறைவு.. எங்கேனு பாருங்க
சென்னை: தக்காளி விலை திடீரென தாறுமாறாக எகிறிய நிலையில், பல்வேறு மாவட்ட மக்கள் விழிபிதுங்கி உள்ளனர்.. ஆனால், ஒரே ஒரு இடத்தில் மட்டும் தக்காளி விலை குறைந்து காணப்படுகிறதாம்.. எங்கே தெரியுமா?!!
ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் தக்காளி விலை எகிறி கொண்டே போகிறது.. தக்காளி இல்லாமல் எந்த சமையலும் சமைக்க முடியாது என்பதால், தக்காளியை தவிர்க்கவும் முடியவில்லை.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தக்காளியின் விலை கிடு,கிடுவென உயர்ந்து விண்ணை தொட்டுக் கொண்டிருக்கிறது... நாளுக்கு நாள் தங்கத்தைப் போல தக்காளியின் விலையும் அதிகரித்து போகிறது..

கோயம்பேடு: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை உள்ளிட்ட பல மாவட்டங்களில், 1 கிலோ தக்காளி ரூ100 வரை விற்பனை செய்யப்படுகிறது.. பல்வேறு மாவட்டங்களில் சதம் அடித்துகொண்டிருப்பதால், தக்காளியை வாங்கவும் முடியாமல் இல்லத்தரசிகள் தவித்து வருகிறார்கள்.. பச்சை மிளகாய் தற்போது 1 கிலோ ரூ60 முதல் ரூ100 வரை விற்பனையாகிறது. காய்கறிகளின் கணிசமான விலை உயர்வு பொதுமக்களை மிகவும் தத்தளிக்க வைத்திருக்கிறது.
விளைச்சல் குறைவு: சேலத்தில் தக்காளி 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.. இத்தனைக்கும் சேலம் மாவட்டத்தில், மேச்சேரி, ஓமலூர், கருமந்துறை, வாழப்பாடி, தலைவாசல், கெங்கவல்லி போன்ற இடங்களில் தக்காளி அதிக அளவில் பயிரிடப்படுகிறது..
கடந்த 3 மாதத்துக்கு முன்புவரை இங்கு தக்காளி கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்பட்டது.. அதனால்தான், தக்காளி விலைக்குறைவை தொடர்ந்து, கோடை வெயில் உள்ளிட்ட பல்வேறு சூழலால் விவசாயிகளும், தக்காளியை பயிரிடுவதில் அவ்வளவாக ஆர்வம் காட்டாமலும் இருந்துள்ளனர். ஆனால், இப்போதோ தக்காளி விலை சதத்தை நோக்கி போய்விட்டது.
நாகையிலும் தக்காளி விலை கிடு,கிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன்காரணமாக, பெரும்பாலான கடைகளில் குறைந்த அளவு தக்காளியே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
விலை குறைவு: ஏற்கனவே பச்சை மிளகாய் விலை 60 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது.. இதற்கு நடுவில் உற்பத்தி சரிவால், கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தக்காளி விலை பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில், ஒரே ஒரு இடத்தில் மட்டும் விலை குறைந்து காணப்படுகிறது.. தமிழ்நாடு கூட்டுறவுத்துறையின் பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனையாகிறதாம்..
மக்கள் நலன் கருதி பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.68க்கு விற்பனையாகிறதாம்.. ஒரு நபருக்கு 2 முதல் 3 கிலோ வரை குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுவதால், இந்த தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications