Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அபராதத்துக்கு எதிராக கேஸ் போட்டவருக்கே அபராதம்.. மாஸ்க் அரசாணைக்கு எதிரான வழக்கு ஐகோர்டில் தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்திக்கு ரூ.10,000 அபராதத்தை சென்னை உயர்நீதிமன்றம் விதித்து இருக்கிறது.

நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியவுடன் முகக்கவசம் அணிவது அரசால் கட்டாயமாக்கப்பட்டது. முகக்கவசம் அணியாமல் சாலைகள், பொது இடங்களில் செல்பவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர்.

Highcourt fined for petitioner seeking GO of Mandatory Mask

தமிழ்நாட்டிலும் முகக்கவசம் கட்டாயம் என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. சுமார் 2 ஆண்டுகள் அமலில் இருந்த இந்த உத்தரவால் முகக்கவசம் அணியாமல் சென்றவர்கள் வழங்கிய அபராத தொகை மட்டுமே பல கோடியை தாண்டியது.

இதற்கிடையே கொரோனா பரவல் குறையத் தொடங்கியதால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் முகக்கவசம் கட்டாயமில்லை என்று அறிவித்தது தமிழ்நாடு அரசு. ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே தமிழ்நாட்டில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பாதிப்பு உயர தொடங்கியது.

இதனை தொடர்ந்து ஏப்ரல் மாதம் செய்தியாளர்களிடம் பேசிய அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மீண்டும் முகக்கவம் அணிய வேண்டும் என்று மக்களிடம் கேட்டுக்கொண்டார். பொது இடங்கள் திரையரங்குகள், கோவில்களில் பல்லாயிரக்கணக்கானோர் மாஸ்க் அணியாமல் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று வெளியான அரசாணையை எதிர்த்து எஸ்.வி.ராமமூர்த்தி என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் எஸ்.வி.ராமமூர்த்தி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது. மேலும் இந்த வழக்கை தொடர்ந்ததற்காக எஸ்.வி.ராமமூர்த்திக்கு ரூ.10,000 அபராதம் விதித்த உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+