“கிரேட் இந்தியன் டார்கெட்”.. உலக முதலீட்டாளர் மாநாட்டில் என்ன ஹைலைட்? 1 ட்ரில்லியன் பொருளாதாரமா?
சென்னை: நந்தம்பாக்கத்தில் 2 நாட்கள் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் சிறப்பம்சங்கள் என்ன? தமிழ்நாடு அரசின் இலக்கு என்று விரிவாக பார்ப்போம்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இன்று காலை 10 மணியளவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இந்த மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இதில் பங்கேற்க உள்ளார். இந்தியா மற்றும் உலகளவில் இயங்கி வரும் பல்வேறு தொழில் நிறுவனங்களின் அதிபர்கள் இதில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

- 2030 ஆம் ஆண்டிற்கு ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை தமிழ்நாடு அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது.
- ரூ.5.50 லட்சம் கோடி முதலீடுகளை இந்த 2 நாள் மாநாட்டில் ஈர்க்க தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளதாக கூறப்படுகிறது.
- புதுப்பிக்கப்பட்ட நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பல்வேறு நிறுவனங்களுக்கான அரங்குகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
- இந்த அரங்கின் முக்கிய இடத்தில் சிறுகுறி தொழில் முனைவோருக்கான 25 க்கும் அதிகமான அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.
- அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்காக தனி பெவிலியன்கள் அமைக்கப்பட்டு அதில் கருத்தருங்கள் நடத்தப்பட உள்ளன. அதில் முதலீடுகள், வேலைவாய்ப்புகள், தமிழ்நாட்டை தேர்வு செய்வதற்கான காரணங்கள் குறித்து அதில் விளக்கமளிப்பார்கள்.
- 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இதில் பதிவு செய்து உள்ளார்கள்.
- ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், மத்திய அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் உள்ளிட்ட பொருளாதார ஆலோசகர்கள் பங்கேற்கின்றனர்.
- மகிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மகிந்திரா, அதானி குழும உயர் அதிகாரி உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.
- உள்ளூர் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் உலக பொருளாதார மாநாடு நடத்தப்படுகிறது.
- தமிழ்நாட்டில் உற்பத்தியை அதிகரிப்பது, வேலைவாய்ப்பை அதிகரிப்பது, ஏற்மதியை அதிகரித்து பொருளாதார வளர்ச்சியை எட்டுவது தமிழ்நாடு அரசின் நோக்கம்.
- வியட்நாம் மின்னணு வாகன உற்பத்தி நிறுவனமான வின்பாஸ்ட் 16 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்கிறார்கள்.
- டாடா நிறுவனம் ஐபோன் உதிரிபாக உற்பத்தி தொழிற்சாலையை ஓசூரில் அமைக்க முதலீடு செய்கிறது.
- சென்னையை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் பிற மாவட்டங்களிலும் தொழிற்துறையை வளர்ச்சியடைய வைக்க தமிழ்நாடு அரசு திட்டம்.












Click it and Unblock the Notifications