வாட்.. 1 லட்சம் டெபாசிட் செய்தால் 15 ஆயிரம் வட்டி! சென்னை கம்பெனியில் குவிந்த மக்கள்.. 360 கோடி காலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ரூ 1 லட்சம் டெபாசிட் செய்தால் ரூ 15 ஆயிரம் மாத வட்டி தருவதாக 1500 பேரிடம் ரூ 360 கோடி மோசடி செய்த வழக்கில் ஹிஜாவ் குழும நிர்வாகி ஒருவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

சென்னையை தலைமையிடமாக கொண்டு ஹிஜாவ் அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் கீழ் எஸ்ஜி அக்ரோ புராடக்ட்ஸ் , அருவி ஆக்ரோ புராடக்ட்ஸ், சாய் லட்சுமி, ஆர்.எம்.கே. பிரதர்ஸ் என துணை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

15 சதவீத வட்டி

15 சதவீத வட்டி

சவுந்தரராஜன், அலெக்சாண்டர் ஆகியோர் இதன் இயக்குநர்களாக உள்ளனர். ஹிஜாப் அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் ரூ 1 லட்சத்திற்கு மாதம் 15 சதவீத வட்டி தருகிறோம் என விளம்பரம் செய்துள்ளனர்.

1500 பேர்

1500 பேர்

அதை நம்பிய சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள ஹிஜாவ் நிறுவனத்தில் 1500க்கும் மேற்பட்டவர்கள் ரூ 360 கோடியை முதலீடு செய்தனர். ஆனால் வாக்குறுதி அளித்தபடி 1500 பேருக்கும் 15 சதவீத வட்டி பணத்தை தரவில்லை என தெரிகிறது. இதனால் முதலீடு செய்த வாடிக்கையாளர்கள் ஹிஜாப் நிறுவனத்திற்கு சென்று தாங்கள் செலுத்திய பணத்தை திரும்ப கொடுக்கும்படி கோரினர்.

 முதலீடு செய்தவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை

முதலீடு செய்தவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை

ஆனால் முதலீடு செய்தவர்கள் அவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. தங்களது நிறுவனத்தை மூடிவிட்டு சவுந்தரராஜனும் அலெக்சாண்டரும் தலைமறைவாகிவிட்டனர். இதனால் 1500 பேரும் பொருளாதார குற்றப்பிரிவில் ஹிஜாவ் நிறுவனத்தின் மீது புகார் அளித்தனர். இது தொடர்பான விசாரணையில் சவுந்தரராஜன், அலெக்சாண்டர், நேரு உள்பட 21 நிர்வாகிகள் பொதுமக்களிடம் மோசடியாக பணம் பெற்று ஏமாற்றியது உறுதியானது.

பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார்

பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார்

அதைத் தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் 21 பேர் மீதும் 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் சென்னை பெரியார் நகரை சேர்ந்த நேருவை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அதிரடியாக நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சவுந்தரராஜன், அலெக்சாண்டர் உள்பட 20 பேரை தேடி வருகிறார்கள்.

தமிழகத்தில் மோசடி

தமிழகத்தில் மோசடி

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணத்தை வசூல் செய்து மோசடி செய்யும் நிறுவனங்களின் மீது பொருளாதார குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்து கைது செய்து வருகிறது. ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம், எல்வின், இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பொதுமக்களிடம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை வசூல் செய்து அதிக வட்டி தருவதாக ஆசை காட்டுகின்றன.

பொதுமக்கள்

பொதுமக்கள்

இதை நம்பி அதிக வட்டிக்கு ஆசைப்பட்ட பொதுமக்களும் வயிற்றை கட்டி, வாயை கட்டி சேர்த்த பணத்தை கொண்டு போய் கட்டுகிறார்கள். சில நாட்கள் கழித்து இவர்களுக்கு சேர வேண்டிய வட்டி வராததால் அசலையாவது தாருங்கள் என கேட்கும் போது நிறுவன உரிமையாளர்கள் தலைமறைவாவதும், கொலை மிரட்டல் விடுவதும் வாடிக்கையாகிவிட்டது.

 அதிக லாபம்

அதிக லாபம்

இது போல் மக்களிடம் பணத்தை வாங்கும் நிறுவனங்களிடம் எப்படி அதிக வட்டி தருவீர்கள் என வாடிக்கையாளர் பணம் செலுத்துவதற்கு முன்பு சந்தேகம் எழுப்பினால், உரிமையாளர்களும் ஊழியர்களும், "உங்களிடம் இருந்து பெறப்படும் தொகை துபாயில் உள்ள எண்ணெய் நிறுவனங்களிலும் சிங்கப்பூர், ஜப்பானில் உள்ள தொழிற்சாலையிலும் முதலீடு செய்யப்படுகிறது. இதனால் எங்களுக்கு அதிக லாபம் கிடைக்கிறது. எங்கள் லாபம் போக உங்களுக்கு அதிக வட்டியை தருகிறோம்" என கூறி வாடிக்கையாளர்களின் வாயை அடைத்து விடுகிறார்கள். இதை நம்பி பணம் கட்டி ஏமாறுவது வாடிக்கையாகிறது. போலீஸாரும் எத்தனை விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தாலும் ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுவது நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+